எடப்பாடி இப்படி ஒரு முடிவெடுத்து விட்டாரே… கதறித் துடிக்கும் அதிமுக நிர்வாகிகள்..!

 

எடப்பாடி இப்படி ஒரு முடிவெடுத்து விட்டாரே… கதறித் துடிக்கும் அதிமுக நிர்வாகிகள்..!

எம்எல்ஏ, எம்பிக்கள் கூட்டம் வெறும் சம்பிரதாயத்துக்கு நடக்கும் கூட்டமாக தான் இருக்கும் என்று அதிமுக தரப்பில் உள்ள சில கீழ் மட்ட நிர்வாகிகளே புலம்புகிறார்கள்.

அதிமுகவில் நடக்கப்போகும் பொதுக்குழு கூட்டம் இப்போது வேறு மாதிரி இருக்கும் என்ற பேச்சு எம்எல்ஏக்கள், எம்பிக்கள் மத்தியில் எழுந்து இருக்கிறது. இடைத்தேர்தல் வெற்றிக்கு முன்பே இரட்டை தலைமை மக்கள் பிரதிநிதிகளை தாஜா செய்ய பல்வேறு வேலைகளை செய்து கொடுத்தனர்.

edappadi

ஆனால், இடைத்தேர்தல் வெற்றிக்கு பிறகு தலைமையில் இருந்து வரும் தகவல்கள் அவர்களுக்கு அதிர்ச்சியை அளித்து வருகிறது.  உள்ளாட்சி தேர்தலில் மேயர் சீட்டு, நகராட்சி தலைவர் சீட்டு, ஒன்றிய தலைவர் சீட்டு என கேட்டு வரக்கூடாது. தலைமை என்ன முடிவெடுக்கிறதோ அதற்கு கட்டுப்பட வேண்டும். நீங்கள் பரிந்துரைக்கும் நபர் வெற்றி பெற்றால் உங்களுக்கு என்ன கிடைக்குமோ, அது கிடைக்கும். அதற்கு மேலேயும் கிடைக்கும்.

edappadi

நமது கூட்டணி கட்சிகளுக்கு தர்மசங்கடம் ஏற்படுத்தும் வகையில் யாரும் நடக்கக் கூடாது. சீட்டு கேட்டு நச்சரிக்கக் கூடாது. தகுதி இருந்தால் நாங்களே சீட் தருவோம். உள்ளாட்சி தேர்தலில் நாங்கள் சொல்லும் நபருக்குதான் நீங்கள் வேலை செய்ய வேண்டும். இனிமேல் நான் ராஜினாமா செய்துவிடுவேன் என்று தலைமையை யாரும் மிரட்ட முடியாது.

 edappadi

நீங்கள் பதவியை துறந்தாலும் நாங்கள் ஜெயிக்க முடியும். இப்போது உள்ளாட்சி தேர்தலில் வெற்றி தான் முக்கியம். செல்வாக்கு, கோஷ்டிபூசல் போன்றவை எதுவும் இருக்கக் கூடாது’’ என்று ஏற்கனவே சொல்லி விட்டார்களாம். இதனால் எம்எல்ஏ, எம்பிக்கள் கூட்டம் வெறும் சம்பிரதாயத்துக்கு நடக்கும் கூட்டமாக தான் இருக்கும் என்று அதிமுக தரப்பில் உள்ள சில கீழ் மட்ட நிர்வாகிகளே புலம்புகிறார்கள்.