எடப்பாடி அரசுக்கு ரூ.100 கோடி அபராதம்? | உச்ச நீதிமன்றம் விளக்கம்

 

எடப்பாடி அரசுக்கு ரூ.100 கோடி அபராதம்? | உச்ச நீதிமன்றம் விளக்கம்

சென்னையில் ஒவ்வொரு வருடமும் வெயில் காலங்களில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகின்றது. அதே போல் ஒவ்வொரு முறையும் மழைக்காலங்களில் மக்கள், முழு மனதுடன் மழையை வரவேற்க இயலாத மனநிலையிலேயே இருக்கின்றனர். தொடர்ந்தார் போன்று இரண்டு மணி நேரங்கள் சென்னையில் மழை பெய்தாலே சென்னை நகர் முழுவதுமாக தண்ணீரில்  மிதக்கும் நகரமாக மாறிவிடுகிறது. குண்டும் குழியுமான சாலைகள், நகர் முழுதும் தேங்கி நிற்கும் மழை நீர் என்று சென்னையின் நீர்நிலைகள் பன்னெடுங்காலங்களாக சரியான பராமரிப்பு இல்லாமலேயே இருக்கிறது. அடையாறு ரிவர்

இந்நிலையில் சென்னையில் உள்ள நீர்நிலைகளை முறையாக பராமரிக்க தமிழக அரசு தவறிவிட்டதாக, தாக்கல் செய்யப்பட்ட வழக்கை தேசிய பசுமைத் தீர்ப்பாயம் விசாரித்து வந்தது. கூவம், அடையாறு, பக்கிங்காம் கால்வாயைத் தூர்வாரிப் சரியாக பராமரிக்காமல் விட்டதால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட காரணமான தமிழக பொதுப்பணித்துறைக்கு 100 கோடி ரூபாய் அபராதம் விதித்து கடந்த பிப்ரவரி மாதம் உத்தரவிட்டது. 

இந்த அபராத உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, கூவம் ஆற்றை மாசுபடுத்தியதாக தமிழக அரசுக்கு பசுமைத் தீர்ப்பாயம் 100 கோடி ரூபாய் அபராதம் விதிக்கவில்லை என்றும், அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை மட்டுமே விடுத்திருந்ததாகவும் நீதிபதிகள் தெளிவுபடுத்தினர். சுப்ரீம் கோர்ட்

தமிழக அரசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் 100 கோடி அபராதம் விதிக்கவில்லை  என்பதால் அதை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்வதாக உத்தரவில் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.