எடப்பாடி அரசுக்கு எதிராக கோர்ட் படியேறும் விஷால்…!?

 

எடப்பாடி அரசுக்கு எதிராக கோர்ட் படியேறும் விஷால்…!?

நடிகர் சங்கத் தலைவராக விஷால் தேர்ந்தெடுக்கப்பட்டபோது விஷால் கொடுத்த பேட்டியெல்லாம் அரசியல்வாதிகளெல்லாம் ஒண்ணுமே இல்லை என்கிற அளவுக்கு அதிரடியாய் இருந்தது!

நடிகர் சங்கத் தலைவராக விஷால் தேர்ந்தெடுக்கப்பட்டபோது விஷால் கொடுத்த பேட்டியெல்லாம் அரசியல்வாதிகளெல்லாம் ஒண்ணுமே இல்லை என்கிற அளவுக்கு அதிரடியாய் இருந்தது!அதுக்கப்புறம் தயாரிப்பாளர் சங்கத்தலைவராக வந்த போதும்,இண்டஸ்ட்ரியை புரட்டிப் போட்டுட்டுதான் வீட்டுக்குப் போவேன் என்று சொன்னார்.கடைசியில் தயாரிப்பாளர் சங்கத்தை அரசாங்கத்தின் கஸ்டடிக்கு அனுப்பியதுதான் புரட்சியின் உச்சம்!vishal

அடுத்தடுத்து  தயாரிப்பாளர் சங்கத்தில் நடந்த குளறுபடிகளால், தற்போதைய நிர்வாகிகளை பணியிலிருந்து விடுவித்துவிட்டு,மாவட்ட பதிவாளர் என்.சேகர் தயாரிப்பாளர் சங்க நிர்வாகத்தைக் கையிலெடுத்திருக்கிறார்.
சங்க நிர்வாகிகள் மீது சொல்லப்பட்ட அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளின் உண்மைதன்மை கண்டறியவும்,சங்கத்தின் வளர்ச்சிக்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படியும் பதிவாளர் என்.சேகர் அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.vishal

விஷால் மீது ஊழல் குற்றச்சாட்டுக்களை முன் வைத்த எதிரனியினரும் கூட தமிழக அரசின் இந்த அதிரடி முடிவை எதிர்பார்க்கவில்லை என்பதுதான் உண்மை! சங்கத்திற்குள் நடந்த சண்டைகள் என்பது எல்லா சங்கங்களிலும் இருப்பதுதான் என்றாலும்,அரசு இப்படியொரு ஆக்சன் எடுத்திருப்பதில் விஷால் ரொம்பவேஅப்செட்!

edappadi

தனக்கு வேண்டிய பிரபல வழக்கறிஞர்கள் டீமோடு தீவிர ஆலோசனையில் இருக்கும் விஷால்,அரசின் நடவடிக்கைக்கு எதிராக வழக்கு தொடரும் முடிவில் இருக்கிறார்.தேர்தல் முடிவுகள் யாருக்கு சாதகமாக இருக்கும் என்பது தெரியாத குழப்பம் நீடிக்கும் நிலையில்,எடப்பாடி அரசை எதிர்த்து கோர்ட்டுக்கு போவதன் மூலம் தனது அரசியல் பிரவேசத்துக்கு இது உதவும் என்றும் விஷால் நம்புகிறாராம்! அபாயகரமான முடிவை எதிர்பார்க்கவில்லை என்னும் நிலையில் ஊழல்வாதி என்ற பட்டம் சூட்டப்பட்ட விஷால் வெளியே தலைகாட்ட முடியாமல் கூனிக்குறுகி நிற்கிறார். இது தன்னுடைய ஹீரோ இமேஜையும் கண்டிப்பாகப் பாதிக்கும் என்று விஷால் நினைப்பதால் அரசாங்கத்தை எதிர்த்து வழக்குத் தொடர முடிவு செய்திருக்கிறார். எடப்பாடி அரசின் மீது இல்லாத ஊழல் குற்றச்சாட்டுகளா? என்று போர்க்கொடி தூக்கினால் அது தன்னுடைய அரசியல் எண்ட்ரிக்கும் பயன்படும் என்பது விஷாலின் கணக்கு.