எடப்பாடியை ஓரம் கட்ட மோடி அதிரடி… இரட்டைத் தலைமையில் ஓ.பி.எஸுடன் இணையும் மைத்ரேயன்..!

 

எடப்பாடியை ஓரம் கட்ட மோடி அதிரடி… இரட்டைத் தலைமையில் ஓ.பி.எஸுடன் இணையும் மைத்ரேயன்..!

ஜெயலலிதாவுக்கும் மோடிக்கும் இடையே பல ஆண்டுகளாக அரசியல் விவகாரங்களில் தூதராக இருந்தவர் மைத்ரேயன்.

ஜெயலலிதாவுக்கும் மோடிக்கும் இடையே பல ஆண்டுகளாக அரசியல் விவகாரங்களில் தூதராக இருந்தவர் மைத்ரேயன். இருவருக்கும் இடையே நேர்மையாகவும் விசுவாசமாகவும் இருந்த ஒரே காரணத்தால் ஜெயலலிதா தொடர்ந்து மூன்று முறை மாநிலங்களவைக்கு மைத்ரேயனை எம்.பியாக அனுப்பி வைத்தார். 

Maitreyan

அதுமட்டுமல்ல ஏற்கெனவே மோடியின் 30 ஆண்டுகால நண்பரும் கூட. ஏற்கெனவே பாஜகவில் இருந்து அதிமுகவுக்கு வந்தவர் இந்த மைத்ரேயன். டெல்லியில் பல தேசிய தலைகளையும், அதிகார வர்க்கத்தினரையும் தனது நட்பு வளையத்திற்குள் வைத்திருப்பவர். ஓ.பி.எஸ்- எடப்பாடியை விட பாஜக முக்கியப்புள்ளிகளிடம் மைத்ரேயனுக்கு மரியாதை அதிகம். கடந்த ஆண்டு இதே ஜூன் மாதம் 23ம் தேதி நிர்மலா சீதாராமனை டெல்லிக்கு சென்று சந்திக்கப்போனார் ஓ.பி.எஸ். அப்பாயிண்மெண்ட் கொடுத்திருந்த நிர்மலா சீதாராமன் அறைக்கு வெளியே நின்று கொண்டிருந்த ஓ.பிஎஸை சந்திக்க மறுத்து விட்டார். அவரை வெளியே நிறுத்தி  விட்டு வெறும் எம்.பியாக இருந்த மைத்ரேயனை சந்தித்தார். 

எடப்பாடி டெல்லியில் தனக்கு காரியம் சாதிக்க அமைச்சர்களான வேலுமணி, தங்கமணியை அனுப்பி வைப்பார். ஆனால், ஓ.பி.எஸ், தனது காரியங்களை மைத்ரேயன் மூலம் சாதித்துக் கொள்வார். அதனால் தான் டெல்லியில் எடப்பாடியை விட ஓ.பிஎஸுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. 

இதையெல்லாம் காரணம் காட்டி தான் எடப்பாடி பழனிசாமியால் அதிமுகவில் இருந்து மைத்ரேயன் ஓரம் கட்டப்பட்டு வந்தார். மீண்டும் தனக்கு மாநிலங்களவை, அல்லது மக்களவையில் தென் சென்னை தொகுதி கிடைக்கும் என எதிர்பார்த்து வந்தார் மைத்ரேயன். ஓ.பிஎஸுக்கு மனமிருந்தாலும் முட்டுக்கட்டை போட்டுவிட்டார் எடப்பாடி. 

Maitreyan

இந்த மனக்குமுறலை  எல்லாம் மோடி, நிர்மலாவை சந்தித்து கொட்டித் தீர்த்து இருக்கிறார் மைத்ரேயன். அப்போது மீண்டும் பாஜகவில் இணைந்து விடுவதாகவும் கூறியிருக்கிறார். அப்போது அவருக்கு கவர்னர் அல்லது அதற்கு ஈடான பதவி வழங்கலாம் என கூறப்பட்டது. ஆனால் மோடியின் கணக்கு வேறாக இருப்பதாகச் சொல்கிறார்கள். எடப்பாடியை ஓரம் கட்டி விட்டு, ஓ.பி.எஸ்- மைத்ரேயனை வைத்து அதிமுகவை இயக்கலாம் என்கிற திட்டத்தில் மைத்ரேயனை அதிமுகவில் தொடர கேட்டுக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதிமுகவின் பலமே முக்குலத்தோர் மற்றும் பிராமணர்கள் தான். முக்குலத்தோர் பிரதிநிதியான ஓ.பிஎஸும்- பிராமணர்களின் பிரதிநிதியான மைத்ரேயனையும் வைத்து தமிழகத்தில் அரசியல் நடத்த கணக்குப் போட்டுள்ளார் மோடி. 

Maitreyan

மாநில அரசுக்கு திரும்பி அழுத்தமான அரசியல் செய்யும் நோக்கத்தில் தான் ஜெயலலிதாவை நினைத்து நாடாளுமன்றத்தில் குலுங்கி குலுங்கி அழுதார் மைத்ரேயன். அதுமட்டுமா? தமிழர்களிடத்தில் செண்டிமெண்டாக பார்க்கப்படும் இலங்கை தமிழர் இரங்கல் விவகாரத்தை இழுத்து இலங்கையில் ஈழத்தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு மாநிலங்களவையில் கண்டனங்களோ, மவுன அஞ்சலியோ செலுத்தப்படாதது என் மனதில் வடுவாக உள்ளது, என் மறைவுக்கு பின்னும் செலுத்த வேண்டாம். என உருக்கமாக பேசினார். 

இவையெல்லாம் திட்டமிட்டே மாநில அரசியலுக்கு வருவதற்காக போடப்பட்ட ஒத்திகை என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். அடுத்து எம்.பியாக ஓய்வு பெற்ற பிறகு ஜெயலலிதா நினைவிடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்திய அவர், ’’ஒற்றைத் தலைமை, இரட்டைத் தலைமை இரண்டு நிலைப்பாடுகளிலும் சாதக- பாதகங்கள் இருக்கின்றன. கட்சிக்கு தலைமை, ஆட்சிக்கு தலைமை இரண்டும் ஒன்று சேர பயணிக்கும்போது இரட்டைத் தலைமையாக இருந்தால்கூட அது நல்ல முறையில் பயணிக்க கூடிய சாத்திய கூறுகள் இருக்கிறது.’’ என்று அவர் கூறியிருப்பது அடுத்து ஓ.பி.எஸ்- மைத்ரேயன் என்கிற இரட்டை தலைமை மனதில் வைத்தே அவர் பேசியதாக பார்க்கப்படுகிறது.