எடப்பாடியால் கடுப்பாகிக் கிடக்கும் கூட்டணி கட்சிகள்…!

 

எடப்பாடியால் கடுப்பாகிக் கிடக்கும் கூட்டணி கட்சிகள்…!

இன்னும் தொகுதிகளை பிரிக்கும்போது எந்தக் கட்சி பறந்து போகும், எந்தக் கட்சி பிரிந்து போகும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

உள்ளாட்சித் தேர்தல் ‘சீட்’ பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் அ.தி.மு.க., தரப்பு 6ம் தேதி பேச்சு நடத்தியது. அப்போது கூட்டணிக் கட்சிகளுக்கு ஒரே நேரத்தில் அழைப்பு போயிருக்கிறது. கூட்டணிக் கட்சித் தலைவர்களும், அ.தி.மு.க., தலைமை அலுவலகத்துக்கு, அடித்து பிடித்து ஓடி வந்திருக்கிறார்கள். 

ஆனால், முதல்வரும், துணை முதல்வரும் தாமதமாகவே வந்துள்ளனர். பிறகு கூட்டணிக் கட்சிகளை தனித்தனியாக அழைத்து பேசியிருக்கிறார்கள். இதனால் எல்லாருமே பல மணி நேரம் காத்து கிடந்திருக்கிறார்கள். 

ops eps

ஒவ்வொரு கட்சியா கூப்பிட்டிருந்தால் சிரமம் இருக்காது என சிலர் புலம்பிக் கொண்டே கிளம்பி இருக்கிறார்கள். அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் ஏற்கெனவே எட்டிக்குப் போட்டியாக உள்ளன. அதிக சீட்டுக்களை ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன. இன்னும் தொகுதிகளை பிரிக்கும்போது எந்தக் கட்சி பறந்து போகும், எந்தக் கட்சி பிரிந்து போகும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.