எடப்பாடிக்கு விழா எடுக்கப் போகும் மு.க ஸ்டாலின்!

 

எடப்பாடிக்கு விழா எடுக்கப் போகும் மு.க ஸ்டாலின்!

வி.ஜி.பி. உலக தமிழ்ச் சங்கம் சார்பில் தைவானுக்கு இரண்டு திருவள்ளுவர் சிலைகள் அனுப்பும் நிகழ்ச்சி சென்னை அடையாறில் உள்ள எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ஜெயகுமார், கடம்பூர் ராஜு ஆகியோர் கலந்து கொண்டனர்.

வி.ஜி.பி. உலக தமிழ்ச் சங்கம் சார்பில் தைவானுக்கு இரண்டு திருவள்ளுவர் சிலைகள் அனுப்பும் நிகழ்ச்சி சென்னை அடையாறில் உள்ள எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ஜெயகுமார், கடம்பூர் ராஜு ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், வரப் போகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் அ.தி.மு.க. பெருமளவிலான வாக்கு சதவீதத்துடன் வெற்றி பெறும் என்றார். 

jayakumar

முதல்வர் எடப்பாடியின் வெளிநாட்டுப் பயணம் குறித்ததான கேள்வி ஒன்றிற்கு பதில் அளிக்கையில், முதல்வர் எடப்பாடி வெளிநாட்டிற்கு சென்று, அங்கிருந்து முதலீடுகளை ஈர்த்து வந்தால் அவருக்கு நான் விழா எடுப்பேன்’ என்று கூறிய ஸ்டாலின் விரைவில் தங்களை அழைத்து விழா எடுப்பார் என்றும், ஸ்டாலின் தான் சொன்னதிலிருந்து பின்வாங்கக் கூடாது என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.