எடப்பாடிக்கு போட்டியாக அமெரிக்கா பறக்கிறார் ஓபிஎஸ்..! முடிவுக்கு வந்த அதிமுக சர்ச்சை!

 

எடப்பாடிக்கு போட்டியாக அமெரிக்கா பறக்கிறார் ஓபிஎஸ்..! முடிவுக்கு வந்த அதிமுக சர்ச்சை!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசு முறைப் பயணமாக லண்டன், அமெரிக்கா, துபாய் போன்ற நாடுகளுக்கு கடந்த ஆகஸ்டு மாதம் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்தார். இந்த அரசு முறை பயணம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது. இது வரையில் தமிழகத்தில் முதல்வர் பதவியை அலங்கரித்தவர்கள் யாருமே இத்தனை நாடுகளுக்கு அரசு முறைப் பயணங்களை மேற்கொண்டு முதலீடுகளைப் பெற்று வந்ததில்லை.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசு முறைப் பயணமாக லண்டன், அமெரிக்கா, துபாய் போன்ற நாடுகளுக்கு கடந்த ஆகஸ்டு மாதம் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்தார். இந்த அரசு முறை பயணம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது. இது வரையில் தமிழகத்தில் முதல்வர் பதவியை அலங்கரித்தவர்கள் யாருமே இத்தனை நாடுகளுக்கு அரசு முறைப் பயணங்களை மேற்கொண்டு முதலீடுகளைப் பெற்று வந்ததில்லை. ‘அம்மா’ ஆட்சியை நடத்துகிறோம் என்று வார்த்தைக்கு வார்த்தை அறிவித்து வரும் அதிமுகவினருக்கு, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முதல்வராக ஒரு முறை கூட இதுவரையில் அரசு முறை பயணமாக வெளிநாடு சென்றதில்லை என்கிற தகவலை யாரும் சொல்லியிருக்க மாட்டார்கள் போல. நாம் சொல்ல வந்த விஷயம் அது கிடையாது.

edapadi palanisamy

முதல்வர் எடப்பாடியின் இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வெளிநாட்டு பயணத்தை கிண்டலடித்து திமுக தலைவர் ஸ்டாலின் பேசி வந்தார். முதலீடு பெறுவதற்காக செல்கிறோம் என்பதெல்லாம் மக்களை ஏமாற்றுகிற வேலை என்று அறிக்கை வெளியிட்டார். தனது வெளிநாட்டு பயணத்தின் சாதனையைப் பற்றி யாரும் வாய் திறக்காதது எடப்பாடியை அப்செட் செய்ய வைத்துள்ளது. அதன் எதிரொலியாகவே கூட்டணிக் கட்சித் தலைவர்கள் எல்லாம் முதல்வரின் வெளிநாட்டு பயணத்தை வீர சாகசங்களைப் புகழ்ந்து பாராட்டினார்கள். வெளிநாடு சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு எடப்பாடி திரும்பி சென்னை வரும் போது, துணை முதல்வர் ஓபிஎஸ், அவரை வரவேற்க விமான நிலையத்திற்கு செல்லவில்லை.
அதிமுகவில் கோஷ்டி பூசல் இன்னமும் இருப்பதையே இந்நிகழ்வு எடுத்துக் காட்டியது. துணை முதல்வர் என்றாலும், கட்சியிலும், ஆட்சியிலும் எடப்பாடிக்கு இருக்கும் முக்கியத்துவம் தனக்கும் எந்தவிதத்திலும் குறையாமல் இருக்க வேண்டும் என்று நினைக்கிறாராம் ஓபிஎஸ். உள்ளுக்குள்ளேயே புகைந்து வந்த நெருப்பு தற்போது தணிந்துள்ளது. 

ops

யெஸ்… உங்களோட யூகம்  சரி தான்… அரசு முறை பயணமாக நாம் கட்டிய வரிப் பணத்தில், அரசு செலவில் அமெரிக்காவிற்கு பறக்க இருக்கிறார் ஓபிஎஸ். இம்மாதம் 7ம் தேதி சென்னையில் இருந்து அமெரிக்காவுக்கு புறப்பட்டு செல்கிறார். அவர் கூடவே நிதித்துறை செயலாளர் கிருஷ்ணனும் செல்கிறார். 
இவங்க எதுக்கு அமெரிக்கா போறாங்களா?
அமெரிக்காவில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற அபிவிருத்தி திட்டத்தின் செயல்பாடுகள் எப்படி இருக்கு என்று ஆய்வு செய்றதுக்காக போறாங்களாம்!
திட்டாதீங்க… அப்படி தான் எங்களுக்கு வந்த அறிக்கை சொல்லுச்சு!