எஞ்சின் இல்லாத பைக்கை தள்ளி சென்றவருக்கு அபராதம் : ஸ்டிரிக்ட் போலீசின் அட்ராசிடீஸ்!

 

எஞ்சின் இல்லாத பைக்கை தள்ளி சென்றவருக்கு அபராதம் : ஸ்டிரிக்ட் போலீசின் அட்ராசிடீஸ்!

என்ஜின் இல்லாத வண்டியை உருட்டிக் கொண்டு சென்றவரிடம் அபராதம் விதித்த கூத்து நடந்துள்ளது. 

புதிய மோட்டார் வாகன சட்டம் அமல்படுத்தியதிலிருந்து போக்குவரத்து காவல் துறையினர் வாகன சோதனையின் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், போக்கு வரத்து விதிமீறல்கள் குறைந்துள்ளதாக போக்குவரத்து அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

police

போக்குவரத்து விதியை மீறுபவர்களிடம் அபராதம் வசூலிக்கும் போலீஸ் ஒருபக்கமிருக்க, சரியான காரணங்களே இல்லமால் அபராதம் விதிக்கும் போலீசும் இருக்கத் தான் செய்கிறார்கள். என்ஜின் இல்லாத வண்டியை உருட்டிக் கொண்டு சென்றவரிடம் அபராதம் விதித்த கூத்து நடந்துள்ளது. 

Police station

கடலூர் மாவட்டம் சேத்தியாத் தோப்பு காவல் நிலைய உதவி ஆய்வாளர் சக்திவேல் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்துள்ளார். அப்போது என்ஜின் இல்லாத வண்டியை இளைஞர் ஒருவர்  தள்ளிக் கொண்டு சென்றுள்ளார். அவரை வழிமறித்த சக்திவேல் ஹெல்மெட் அணியவில்லை என்று கூறி அவருக்கு அபராதம் விதித்துள்ளார்.

 

அதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த இளைஞர் “என்ஜினே இல்லாத வண்டிக்கு எதுக்கு சார் அபராதம்” என்று அருகில் இருந்த ஏட்டைய்யாவிடம் முறையிட்டுள்ளார். உருப்படியான காரணமே இல்லாமல் அபராதம் விதிக்கும் காவல் துறையினர், இளைஞரின் கேள்விக்கு தகுந்த பதிலா சொல்லியிருக்கப் போகிறார்கள். அதனையடுத்து, அந்த நபர் அங்கிருந்து புலம்பிக் கொண்டே அபராதத்தை செலுத்திவிட்டு சென்றுள்ளார். என்ஜின் இல்லாத வண்டிக்கே அபராதம் விதிக்கும் காவல்துறையினர், நடந்து போனா கூட ஹெல்மெட் போடலன்னு அபராதம் விதிப்பங்களோ?!.