எஞ்சினியரிங் படித்தால் இதுதான் நிலைமையா… அதிர வைத்த சம்பவம்..

 

எஞ்சினியரிங் படித்தால் இதுதான் நிலைமையா… அதிர வைத்த சம்பவம்..

படித்த படிப்புக்கு ஏத்த வேலை கிடைப்பது குதிரைக் கொம்பாக இருக்கிறது என்ற கொந்தளிப்பு நாடு முழுக்க எதிரொலிக்கிறது.

படித்த படிப்புக்கு ஏத்த வேலை கிடைப்பது குதிரைக் கொம்பாக இருக்கிறது என்ற கொந்தளிப்பு நாடு முழுக்க எதிரொலிக்கிறது.இனி காத்திருப்பதில் பலன் இல்லை என்று நினைத்த எஞ்சினியரிங் பட்டதாரிகளில் பலர் இன்றைக்கு ஜொமேட்டோ,யூபர் நிறுவனங்களில் உணவு டெலிவரி செய்யும் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.வேலை இல்லை என்கிற கொடுமை எல்லை மீறிவிட்டது என்பதற்கான சம்பவம் ஒன்று தற்போது பலரையும் அதிர வைத்திருக்கிறது! 

Cleaners

சட்டப்பேரவையில் துப்புரவு பணியாளர்களுக்கான காலியிடம் 15.அதற்கு இதுவரை 4000 பேர் விண்ணப்பித்திருக்கிறார்கள்.இத்தனைக்கும் இந்த காலியிடத்துக்கான உச்சக்கட்ட கல்வி வரப்பு எட்டாம் வகுப்பு படித்திருந்தால் போதும் என்ற நிலையில் விண்ணப்பித்திருக்கிற அத்தனை பேரும் பி.டெக்,எம்.இ படித்த எஞ்சினியர்கள் என்பது எல்லோரையும் உலுக்கியிருக்கிறது.

Unemployment

ஏற்கனவே.உயர் நீதி மன்றத்திற்கான துப்புரவு பணியாளர் தேர்வு நடந்த போதும் இது போல் பல்லாயிரக்கணக்கான எஞ்சினியர்கள் விண்ணப்பித்திருந்தை யாரும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க மாட்டீர்கள்… இதெல்லாம் எங்கு போய் முடியுமோ தெரியவில்லை..!