எச்.ஐ.வி ரத்தம்… தற்கொலை செய்துகொண்ட வாலிபரின் உடல் பிரேத பரிசோதனை

 

எச்.ஐ.வி ரத்தம்… தற்கொலை செய்துகொண்ட வாலிபரின் உடல் பிரேத பரிசோதனை

கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி ரத்தத்தை தானமாக கொடுத்ததால் தற்கொலை செய்துகொண்ட வாலிபரின் உடல் நாளை பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது.

மதுரை: கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி ரத்தத்தை தானமாக கொடுத்ததால் தற்கொலை செய்துகொண்ட வாலிபரின் உடல் நாளை பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சாத்தூரை சேர்ந்த 8 மாத கர்ப்பிணி பெண்ணுக்கு ரத்தம் தானமாக பெறப்பட்டு கர்ப்பிணிக்கு ஏற்றப்பட்டது. ஆனால் அந்த ரத்தத்தில் எச்ஐவி நோய் தொற்று இருப்பது தெரிய வந்ததையடுத்து அப்பெண்ணின் குடும்பத்தினர் மட்டுமே ஒட்டுமொத்த தமிழக மக்களுமே அதிர்ச்சியடைந்தனர்.

இதற்கிடையே ரத்தத்தை தானமாக வழங்கிய கமுதியை சேர்ந்த இளைஞர் குற்றவுணர்வு காரணமாக தற்கொலைக்கு முயன்றார். தொடர்ந்து அவருக்கு மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இதனையடுத்து இளைஞரின் உயிரிழப்பில் சந்தேகம் இருக்கிறது என அவரது தந்தை தெரிவித்து காவல்துறையில் புகார் அளித்தார்ர். அதில், மகனின் உடற்கூறு ஆய்வை மதுரை மருத்துவர்களை தவிர்த்து பிற மருத்துவர்களை வைத்து நடத்த வேண்டும் என கோரியிருந்தார். மேலும், இதுதொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கும் தொடரப்பட்டது.

இந்நிலையில் வழக்கை விசாரித்த நீதிமன்றம்எய்ட்ஸ் பாதிப்பில் இறந்த வாலிபரின் உடலை நெல்லை, தேனி, சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையைச் சேர்ந்த ஏதாவது ஒரு மருத்துவக் கல்லூரியின் 2 தடயவியல் நிபுணர்கள் முன்னிலையில் ஜனவரி 2-ம்தேதி (நாளை) மதுரை அரசு மருத்துவ குழுவினர் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என உத்தரவிட்டது. அதன்படி இளைஞரின் பிரேத பரிசோதனை நாளை நடைபெற இருக்கிறது.