எச்சரிக்கை! ஏ.டி.எம். மையங்களால் கொரோனா பரவும் அபாயம்!!

 

எச்சரிக்கை! ஏ.டி.எம். மையங்களால் கொரோனா பரவும் அபாயம்!!

கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருப்பதற்கு நாம்  ஒவ்வொருவரும் கைகளை கழுவுவதும், கிருமி நாசினி கொண்டு அவ்வப்போது சுத்தம் செய்வதும் அவசியம் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருப்பதற்கு நாம்  ஒவ்வொருவரும் கைகளை கழுவுவதும், கிருமி நாசினி கொண்டு அவ்வப்போது சுத்தம் செய்வதும் அவசியம் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. ஆனால் வங்கி ஏ.டி.எம். மையங்களை எந்தவித பாதுகாப்பும் இல்லாமல் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களால் வைரஸ் பரவும் அபாயம் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். வைரஸ் தொற்று ஏற்பட்டவர் பணத்தை எடுத்துவிட்டு சென்றால் அதன்பின் அந்த ஏ.டி.எம் மையங்களில் பணம் எடுக்கும் மற்ற வாடிக்கையாளர்களுக்கும் பரவும்

ஏடிஎம்

ஆனால் இந்த காரணத்திற்காக ஏ.டி.எம் மையங்களை பூட்டிவைக்கமுடியாது. அத்தியாவசிய தேவை என்பதால் ஏ.டி.எம். மையங்கள் திறந்துவைக்கப்பட்டுள்ளன.  எச்.டி.எஃப்.சி. போன்ற ஒருசில வங்கி கிளைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் கிருமி நாசினி மூலம் கைகளை சுத்தம் செய்த  பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். அதேபோல் ஏ.டி.எம். மையங்களுக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு காவலாளிகள் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. ஏ.டி.எம். இயந்திரங்களும் அவ்வப்போது சுத்தம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் ஒரு சில ஏ.டி.எம் இயந்திரங்களில் இந்த வசதி இல்லாததால் எச்சரிக்கையுடன் இருக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.