எச்சரிக்கையாகவும், விழிப்புணர்வோடும் இருக்க வேண்டியவர்கள் யார் யார்?
உடல்நலம் சரியாக இருக்கும். ஆடம்பரமான வாழ்க்கை முறையால் வீட்டில் டென்சன் அதிகரிக்கும்.
திங்கட்கிழமை (08.07.2019) ராசி பலன்கள்
நல்ல நேரம்
காலை 10 மணி முதல் 10.30 வரையில்
மாலை 3 முதல் 4 வரையில்
ராகு காலம் : காலை 7.30 மணி முதல் 9 வரையில்
எமகண்டம் : காலை 10.30 மணி முதல் 12 வரையில்
சந்திராஷ்டமம் : கும்பம்
பரிகாரம் : தயிர்
மேஷம்
உடல்நலம் சரியாக இருக்கும். ஆடம்பரமான வாழ்க்கை முறையால் வீட்டில் டென்சன் அதிகரிக்கும். மன உறுதியால் வெற்றி பெற வேண்டிய நாள். எதிலும் எச்சரிக்கையாகவும், விழிப்புணர்வுடனும் இருங்கள்.
அதிர்ஷ்ட எண்: 5
ரிஷபம்
மாலையில் நண்பர்களுடன் வெளியில் செல்லுங்கள், அது நிறைய நல்லதை செய்யும். இன்று மேற்கொள்ளும் கூட்டு முயற்சிகள் கடைசியில் ஆதாயம் தருபவையாக இருக்கும்.
அதிர்ஷ்ட எண்: 4
மிதுனம்
அழுத்தத்தை விரட்டிட குழந்தைகளுடன் நேரத்தை செலவிடுங்கள். குழந்தைகளின் குணமாக்கும் சக்தியை நீங்கள் அனுபவிப்பீர்கள். ஆசிகளும் நல்ல அதிர்ஷ்டங்களும் வரவுள்ளதால் விருப்பங்கள் பூர்த்தியாகும். முந்தைய நாட்களின் கடின உழைப்புகளுக்குப் பலன்கள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட எண்: 2
கடகம்
துறவி ஒருவரை சந்திப்பது உங்களுக்கு ஆறுதலையும் மன அமைதியையும் கொடுக்கும். அலுவலகத்தில் இதுவரை நீங்கள் யாருடன் பேச வேண்டுமென முயற்சி செய்தீர்களோ அவரிடம் பேசும் நல்ல வாய்ப்பு இன்று கிடைக்கும்.
அதிர்ஷ்ட எண்: 6
சிம்மம்
தாமதமான நிலுவைகள் வசூலாகும் என்பதால் பண நிலைமை மேம்படும். மாலை நேரத்துக்காக விருந்தினர்கள் உங்கள் வீட்டில் கூடுவார்கள். குழப்பங்களோ, குடும்ப நிகழ்ச்சியோ எதுவாக இருந்தாலும் அதில் நீங்கள் ஆளுமை செலுத்துவீர்கள். சாதகமான கிரகங்கள் உங்களுக்கு இன்றைய நாளை ஆனந்தமயமாக உணரச் செய்யும்.
அதிர்ஷ்ட எண்: 4
கன்னி
உங்களின் பெற்றோர்கள் ஆதரவளிப்பதால் நிதி பிரச்சினை தீர்ந்துவிடும். உங்கள் திறமைகள் கவனிக்கப்படும். சமூக மற்றும் ஆன்மிக நிகழ்ச்சிகளுடன் இந்த நாள் இனிமையாக இருக்கும். இன்று உங்களிடையே வாக்குவாதம் நடக்க கூடும்.
அதிர்ஷ்ட எண்: 3
துலாம்
முந்தைய முயற்சிகளின் மூலம் கிடைக்கும் வெற்றி உங்கள் நம்பிக்கையை உயர்த்தும். இன்றைக்கு வாழ்ந்தால் போதும் என்ற எண்ணத்தையும், அதிகமான நேரத்தையும் பணத்தையும் பொழுதுபோக்கில் செலவிடுவதையும் கட்டுப்படுத்துங்கள். மிகவும் எச்சரிக்கையாவும், விழிப்புணர்வோடும் இருக்க வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண்: 5
விருச்சிகம்
செலவுகள் அதிகமாகும், ஆனால் வருமானமும் கூடுவதால் சரியாகிவிடும். உங்களுக்கு சம்பந்தமில்லாத விஷயங்களில் ஈடுபாடு காட்டாதீர்கள்.
அதிர்ஷ்ட எண்: 7
தனுசு
இன்று நீங்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் நீங்கள்தான் மையமானவராக இருப்பீர்கள். இன்று தர்மகாரியமும், சமூகப் பணியும் அழைக்கும்.
அதிர்ஷ்ட எண்: 4
மகரம்
உங்கள் விருப்பத்தின்படி குழந்தைகள் நடக்க மாட்டார்கள். அது உங்களை ஆத்திரம் அடையச் செய்யலாம். உங்களிடம் இருந்து மற்றவர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என உங்களுக்குத் தெரிந்திருக்கிறது. ஆனால் இன்று செலவு செய்வதில் அதிக தாராளமாக காட்டாதிருக்க முயற்சி செய்யுங்கள். உறவினர்கள் வருகை, நீங்கள் நினைத்ததை விட நல்லதாக இருக்கும். எனவே உங்களைத் தேடி வரும் வாய்ப்புகளைப் பயன்படுத்துங்கள்.
அதிர்ஷ்ட எண்: 4
கும்பம்
பயம், சந்தேகம், கோபம், பேராசை போன்ற நெகடிவ் சிந்தனைகளை ஒழிக்க வேண்டும். அவை உங்கள் விருப்பங்களின் எதிர் சக்திகளை காந்தம் போல இழுப்பவை.
அதிர்ஷ்ட எண்: 2
மீனம்
உங்களிடம் திறமைக்கு குறைவில்லை, நம்பிக்கைதான் குறைவு. எனவே உங்கள் உண்மையான திறமையை அறிந்திடுங்கள். இன்று உங்கள் வேலையை எல்லோரும் பாராட்டக்கூடும். இனிமையான அத்தியாயம் இன்று தொடங்கும்.
அதிர்ஷ்ட எண்: 8