எச்ஐவி ரத்தம் செலுத்தப்பட்ட பெண்ணுக்கு குழந்தை பிறந்தது: குழந்தையை பாதிக்குமா?

 

எச்ஐவி ரத்தம் செலுத்தப்பட்ட பெண்ணுக்கு குழந்தை பிறந்தது: குழந்தையை பாதிக்குமா?

எச்.ஐ.வி. ரத்தம் செலுத்தப்பட்டதால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண்ணுக்கு மதுரை அரசு மருத்துவமனையில் நேற்றிரவு பெண் குழந்தை பிறந்தது.

மதுரை: எச்.ஐ.வி. ரத்தம் செலுத்தப்பட்டதால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண்ணுக்கு மதுரை அரசு மருத்துவமனையில் நேற்றிரவு பெண் குழந்தை பிறந்தது.

விருதுநகர் மாவட்டம் சாத்தூரை சேர்ந்த கர்ப்பிணிக்கு கடந்த மாதம் எச்.ஐ.வி.தொற்றுள்ள ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தனிவார்டில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்து வந்தார்.இந்நிலையில் அவருக்கு நேற்றிரவு பிரசவ வலி ஏற்பட்டது. தொடர்ந்து சுகப்பிரசவம் ஏற்பட்டு பெண் குழந்தை பிறந்தது. தாயும் சேயும் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.

pregnant

இதுகுறித்து மருத்துவமனை டீன் சண்முகசுந்தரம் கூறியதாவது: எச்.ஐ.வி. தொற்றுள்ள ரத்தம் செலுத்தப்பட்டதால் பாதிக்கப்பட்ட பெண் கடந்த மாதம் 26ம் தேதி முதல் மருத்துவமனையின் மகப்பேறு வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு சுகப்பிரசவத்தின்மூலம் 1 கிலோ 700 எடையுள்ள பெண் குழந்தை பிறந்தது. குறைவான எடையுடன் பிறந்திருந்தாலும் குழந்தை ஆரோக்கியமாக உள்ளது.தாயையும், சேயையும் கண்காணிக்க 10 பேர் கொண்ட மருத்துவக் குழு அமைக்கப்பட்டுள்ளது. எச்.ஐ.வி. தடுப்பு மற்றும் மஞ்சள்காமாலைக்கான தடுப்பு ஊசிகள் போடப்பட்டுள்ளன. தாய்ப்பால் மூலம் குழந்தைக்கு எச்.ஐ.வி. தொற்று பரவும் என்பதால் பால் பவுடர் மூலம் உணவளிக்கப்படுகிறது.

hiv

45 நாள்கள் தீவிர கண்காணிப்புக்குப் பிறகுதான் அந்தக் குழந்தைக்கு எச்.ஐ.வி. தொற்று உள்ளதா என்பதைக் கண்டறிய முடியும். 
இவ்வாறு அவர் கூறினார்.