எங்க வந்து எதை கோத்துவிடுறாரு பாருங்க இந்த விஜய் மல்லையா!

 

எங்க வந்து எதை கோத்துவிடுறாரு பாருங்க இந்த விஜய் மல்லையா!

அரசு முகமைகளும் வங்கிகளும் நினைத்தால் யாரை வேண்டுமானாலும் இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ள முடியும், நான் முழுமையாக கடனை திருப்பி செலுத்திவிடுகிறேன் என்று சொல்லியும் என்னை டார்ச்சர் செய்கிறார்கள், கெட்ட எண்ணமும் இடைவிடாத இம்சையும் கொண்டவர்கள் வங்கிகள்

’இந்தாளு கிங்ஃபிஷர் சரக்கு கம்பெனி நடத்துறாரா இல்ல கேலண்டர் அச்சடிக்கிற பிரிண்டிங் பிரஸ் வச்சிருக்கிறாரா’ என்கிற சந்தேகம் எழும் அளவுக்கு ஒவ்வொரு வருடமும் கிங்ஃபிஷர் கேலண்டர்களை பார்த்துப் பார்த்து செதுக்கி உருவாக்குவார் விஜய் மல்லையா. சரக்கு கம்பெனி, ஐபிஎல் கிரிக்கெட் ஃப்ரான்சைஸீ என வாழ்க்கையை வாழ்ந்து கொண்டாடிய மனிதன், வீழ்ந்தது விமான நிறுவனம் தொடங்கியபோதுதான். கிட்டத்தட்ட 12 இலக்கங்களில் கடன் வைத்துவிட்டு, நாட்டைவிட்டு எஸ்கேப் ஆகி லண்டனில் இருந்துகொண்டு கருத்துமழை பொழியும் விஜய் மல்லையா, காஃபி டே உரிமையாளர் சித்தார்த்தாவின் மரணத்தையும், கடன்காரர்களை வங்கிகள் நடத்தும்விதத்தையும் இணைத்து கருத்து தெரிவித்துள்ளார்

Mallya condolences Siddhartha's death

மல்லையா வெளியிட்டுள்ள ட்விட்டரில் “அரசு முகமைகளும் வங்கிகளும் நினைத்தால் யாரை வேண்டுமானாலும் இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ள முடியும், நான் முழுமையாக கடனை திருப்பி செலுத்திவிடுகிறேன் என்று சொல்லியும் என்னை டார்ச்சர் செய்கிறார்கள், கெட்ட எண்ணமும் இடைவிடாத இம்சையும் கொண்டவர்கள் வங்கிகள்” என்றும், “மேலை நாடுகளில் கடன்காரர்கள் கடனை திருப்பிச் செலுத்த எல்லா வழிகளிலும் உதவுவார்கள் என்றும், இந்தியாவில்தான் கடனை திருப்பிச் செலுத்த முன்வரும்போதும் நிறைய தடைகள் உருவாக்கப்படுவதாகவும்” மல்லையா குறைபட்டுக்கொண்டுள்ளார். சித்தார்த்தா கடைசி வரை இங்கேயே இருந்து போராடி, வேறு வழியில்லாமல் தன்னை மாய்த்துக்கொண்டார். ஆனா, நீங்க சொல்லாம கொள்ளாம ஓடிப்போய்ட்டு இப்போ மீ பாவம்னா எப்புடி நம்புறது மல்லையா? சித்தார்த்தாவும் நீங்களும் ஒண்ணா ஆகவே முடியாது!.