எங்க பூத் ஏஜென்ட்ங்ககூடவே எங்களுக்கு ஓட்டு போடல? சம்திங் ராங்! – தங்கத்தமிழ்ச்செல்வன் ஜிவ்

 

எங்க பூத் ஏஜென்ட்ங்ககூடவே எங்களுக்கு ஓட்டு போடல? சம்திங் ராங்! – தங்கத்தமிழ்ச்செல்வன் ஜிவ்

ஒட்டுமொத்த இந்தியாவும் ஒரு பக்கம் தங்கள் வாக்கினை செலுத்தினால், தமிழகம் மட்டும் வழக்கம்போல தன் பாட்டுக்கு வேறு திசையில் ஓட்டு போட்டிருக்கிறது. தமிழகத்தில் முதன்முதலாக வெற்றி வேட்பாளரை தேர்வுசெய்திருக்கும் திருச்சி, 23 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் உறுப்பினரை பெற்றிருக்கிறது.

ஒட்டுமொத்த இந்தியாவும் ஒரு பக்கம் தங்கள் வாக்கினை செலுத்தினால், தமிழகம் மட்டும் வழக்கம்போல தன் பாட்டுக்கு வேறு திசையில் ஓட்டு போட்டிருக்கிறது. தமிழகத்தில் முதன்முதலாக வெற்றி வேட்பாளரை தேர்வுசெய்திருக்கும் திருச்சி, 23 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் உறுப்பினரை பெற்றிருக்கிறது. அதேபோல், மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதி மாறனின் வெற்றியும் உறுதியாகிவிட்டது.

thangatamilselvan

இதற்கிடையே தேனி நாடாளுமன்ற அமமுக வேட்பாளர் தங்கத்தமிழ்ச்செல்வன் பகீர் குண்டு ஒன்றை வீசியிருக்கிறார். வாக்கு எண்ணிக்கை நடந்து கொண்டிருக்கும்போதே செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “குறிப்பிட்ட வாக்குச்சாவடியில் எங்களுக்கென்று 12 பூத் கமிட்டி உறுப்பினர்கள் இருந்தார்கள், ஆனால், அந்த வாக்கு எந்திரத்தை எண்ணும்போது, எங்கள் கட்சிக்கென்று ஒரு ஓட்டுகூட பதிவாகவில்லை” என பகீர் குற்றச்சாட்டை கிளப்பி இருக்கிறார்.

<iframe src=”https://www.facebook.com/plugins/video.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2FThangaTamilSelv%2Fvideos%2F2205209546457301%2F&show_text=0&width=560″ width=”560″ height=”315″ style=”border:none;overflow:hidden” scrolling=”no” frameborder=”0″ allowTransparency=”true” allowFullScreen=”true”></iframe>

தங்கத்தமிழ்ச்செல்வனின் சந்தேகன் என்னவென்றால், ஒட்டுமொத்தமாக இந்தியாவில் பாஜக ஜெயிக்கிறது, தமிழகம் முழுக்க திமுக ஜெயிக்கிறது, ஆனால், தேனியில் மட்டும் அதிமுக வெல்வது எப்படி, ஏதோ தில்லுமுல்லு நடந்திருக்கிறது என நறநறக்கிறார். விஷயம் கேள்விப்பட்டு ஓ.பி.எஸ். மைண்ட்வாய்ஸ் என்னவாக இருக்கும் “தம்பி தமிழ்ச்செல்வா, நீங்க முருகன் மாதிரி லட்சக்கணக்கான மக்களுக்கு பணம் குடுத்து தலையை சுத்தி ஜெயிக்க பாத்தீங்க, நாங்க வினாயகர் மாதிரி, யாரை சுத்தனுமோ அவுங்களை சுத்தி வந்தோம், இதோ வெற்றிக்கனி எங்களுக்கே’ என்பதாக இருக்கலாம்.