‘எங்க ஜே.சி.பி இயந்திரத்துக்கு EMI கட்டணும்’… வேறொரு ஜே.சி.பி இயந்திரத்தைத் திருடிச்சென்ற 3 பேர் கைது!

 

‘எங்க ஜே.சி.பி இயந்திரத்துக்கு EMI கட்டணும்’… வேறொரு ஜே.சி.பி இயந்திரத்தைத் திருடிச்சென்ற 3 பேர் கைது!

அந்த இயந்திரம் கடந்த 19 ஆம் தேதி  காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

சென்னை அம்பத்தூரில் வசித்து வரும் ராஜீவ் காந்தி என்பவர் JCB இயந்திரம் ஒன்று வாங்கியுள்ளார். அந்த இயந்திரம் கடந்த 19 ஆம் தேதி  காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில், போலீஸார் அப்பகுதியில் உள்ள அனைத்து சிசிடிவி கேமராக்களையும் சோதனை செய்து பார்த்துள்ளனர். அப்போது, ஆந்திராவைச் சேர்ந்த ஒரு நபர் அதனைத் திருடிச்சென்றதும், அவருக்கு 2 பேர் உதவி செய்ததும் தெரிய வந்துள்ளது. 

tnt

இதனடிப்படையில், ஆந்திராவைச் சேர்ந்த கேசவன் மற்றும் திருத்தணியை சேர்ந்த கார்த்திக் மற்றும் ராமராஜ் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை  மேற்கொண்டுள்ளனர். அதில், அந்த 3 பேரும் தாங்கள் வாங்கிய  ஜே.சி.பி இயந்திரத்திற்கு மாத தவணை கட்ட வேண்டும் என்பதற்காக ராஜீவ்காந்தியின்  ஜே.சி.பி இயந்திரத்தைத் திருடி விற்க முயன்றதாகத் தெரிவித்துள்ளனர். அவர்கள் அளித்த வாக்கு மூலம் போலீஸாரை ஆத்திரமடையச் செய்துள்ளது. அதன் பின்னர்,  ஜே.சி.பி இயந்திரத்தை மீட்ட போலீசார் அவர்கள் மூன்று பேரையும் அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்துள்ளனர்.