எங்க கட்சி ஆட்சியில் இருக்கிற எல்லா மாநிலங்களிலும் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுவோம்….. காங்கிரஸ் தகவல்

 

எங்க கட்சி ஆட்சியில் இருக்கிற எல்லா மாநிலங்களிலும் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுவோம்….. காங்கிரஸ் தகவல்

ராஜஸ்தான் உள்ளிட்ட காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் அனைத்து மாநிலங்களிலும் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுவோம் என அந்த கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான அகமது படேல் தெரிவித்தார்.

கடந்த சில தினங்களுக்கு முன் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான கபில் சிபல், எந்தவொரு மாநிலமும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த முடியாது என கூற முடியாது. அப்படி சொன்னால் அது அரசியலமைப்புக்கு விரோதமானது என தெரிவித்தார். மேலும், அந்த கட்சியின் மற்றொரு மூத்த தலைவரான ஜெய்ராம் ரமேஷ், குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த முடியாது என்று எப்படி சொல்ல முடியும் என்று மாநிலங்களின் திறன் (அதிகாரம்) குறித்து சந்தேகத்தை எழுப்பி இருந்தார்.

கபில் சிபல்

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் குடியுரிமை திருத்த சட்டத்தை மாநிலங்கள் அமல்படுத்துவதை தவிர வேறுவழியில்லை என்ற ரீதியில் பேசி வரும் நிலையில், அந்த கட்சி தங்களது கட்சி ஆட்சி செய்யும் மாநிலங்களில் எல்லாம் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம் கொண்டு வரபோவதாக தெரிவித்துள்ளது.

அகமது படேல்

இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் அகமது படேல் கூறுகையில், பஞ்சாப்பை தொடர்ந்து, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் போன்ற எங்கள் ஆட்சி நடைபெறும் மாநிலங்களில் குடியுரிமை திருத்த சட்ட மசோதாவுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வர யோசனை செய்து வருகிறோம். குடியுரிமை திருத்த சட்டத்தை மறுபரிசீலனை செய்ய மத்திய அரசுக்கு இது தெளிவான செய்தியாக இருக்கும் என தெரிவித்தார்.