எங்க ஆள எதிர்க்கட்சி தலைவராக அறிவிக்கணும்…. இல்லன்னா போராட்டம் நடத்துவோம்… மிரட்டும் ஜார்க்கண்ட் பா.ஜ.க.

 

எங்க ஆள எதிர்க்கட்சி தலைவராக அறிவிக்கணும்…. இல்லன்னா போராட்டம் நடத்துவோம்… மிரட்டும் ஜார்க்கண்ட் பா.ஜ.க.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்சா, காங்கிரஸ் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளின் கூட்டணி அரசு நடைபெறுகிறது. ஜார்க்கண்ட் முக்தி மோர்சா கட்சியின் தலைவர் ஹேமந்த் சோரன் முதல்வராக உள்ளார். அண்மையில் அம்மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், ஜே.வி.எம்.(பி) கட்சியின் தலைவருமான பாபுலால் மராண்டி தனது கட்சியை பா.ஜ.க.வுடன் இணைத்தார்.

இம்மாதம் 12ம் தேதிக்குள் பாபுலால் மராண்டியை ஜார்க்கண்ட் சட்டப்பேரவையின் எதிர்க்கட்சி தலைவராக சபாநாயகர் அறிவிக்கவேண்டும் இல்லையென்றால் போராட்டம் நடத்துவோம் என அம்மாநில பா.ஜ.க. எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்சா, காங்கிரஸ் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளின் கூட்டணி அரசு நடைபெறுகிறது. ஜார்க்கண்ட் முக்தி மோர்சா கட்சியின் தலைவர் ஹேமந்த் சோரன் முதல்வராக உள்ளார். அண்மையில் அம்மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், ஜே.வி.எம்.(பி) கட்சியின் தலைவருமான பாபுலால் மராண்டி தனது கட்சியை பா.ஜ.க.வுடன் இணைத்தார். இதனையடுத்து பா.ஜ.க.வின் சட்டப்பேரவை தலைவராக பாபுலால் தேர்ந்தெடுக்கப்பட்டார். 

hemant-soren

ஆனால் பாபுலால் மராண்டியை சபாநாயகர் ரவிந்திர நாத் மஹ்தோ இன்னும் எதிர்க்கட்சி தலைவராக  அறிவிக்கவில்லை. அதேசமயம் இது தொடர்பாக அனைத்து சாத்தியங்கள் மற்றும் சட்டங்களையும் ஆராய காலஅவகாசம் கேட்டுள்ளார். இது பா.ஜ.க.வினருக்கு கடும் கோபத்தை கிளப்பியுள்ளது. இம்மாதம் 12ம் தேதிக்குள் பாபுலால் மராண்டியை எதிர்க்கட்சி தலைவராக சபாநாயகர் அறிவிக்கவில்லை என்றால் பெரிய அளவில் போராட்டம் நடத்த பா.ஜ.க.வினர் திட்டமிட்டுள்ளனர்.

babulal-marandi-09

ஜார்க்கண்ட் மாநில பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் பிரயாழ் ஷாதேவ் இது தொடர்பாக கூறுகையில், இனி தான் கட்சியின் சிறப்பு உறுப்பினர் இல்லை என்பதை சபாநாயகர் கட்டாயம் புரிந்து கொள்ள வேண்டும். அவர் சபாநாயகர் மற்றும் கட்சி எல்லைக்கு அப்பால் அவர் செயல்பட வேண்டும். பாபுலால் மராண்டியை எதிர்க்கட்சி தலைவராக அறிவிக்கக்கோரி மார்ச் 12ம் தேதிவரை காலஅவகாசம் கொடுத்துள்ளோம். அது நடக்கவில்லை என்றால் நாங்கள் மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்துவோம். உருவப்பொம்மைகளையும் எரிப்போம் என தெரிவித்தார்.