“எங்க அம்மா, அப்பாவ பழைய இடத்துக்கே மாத்திடுங்க” கொரோனா பணியில் இருக்கும் பெற்றோருக்காக கதறி அழும் குழந்தைகள்!

 

“எங்க அம்மா, அப்பாவ பழைய இடத்துக்கே மாத்திடுங்க” கொரோனா பணியில் இருக்கும் பெற்றோருக்காக கதறி அழும் குழந்தைகள்!

நம் உயிரை காப்பாற்ற காவல்துறையும் மருத்துவத்துறையும் தொடர்ந்து பணியாற்றி வருகின்றன.

கொரோனா வைரஸ் பரவத்தொடங்கிய நாளில் இருந்து, மத்திய அரசும் மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கையை எடுத்து வருகின்றன. கொரோனாவில் இருந்து மக்களை காக்க நாடு முழுவதும் வணிக வளாகங்கள், பள்ளி கல்லூரிகள் என அனைத்தும் மூடப்பட்டு விட்டன. இருப்பினும் நம் உயிரை காப்பாற்ற காவல்துறையும் மருத்துவத்துறையும் தொடர்ந்து பணியாற்றி வருகின்றன. அவர்களது சேவைக்கு, நாம் கொடுக்கும் எந்த கைமாறும் ஈடாகாது. 

ttn

இதுமட்டுமில்லாமல் மக்களின் உயிரைக் காக்க மருத்துவர்களும், காவல்துறையினரும் பணியிடைமாற்றம் செய்யப்பட்டு தங்களது குடும்பங்களை விட்டு வெகு தொலைவில் வசித்து வருகின்றனர். இதனை பற்றி பேசிய மருத்துவர்கள், மக்களின் உயிரைக் காக்க பாடுபட்டு வரும் எங்களை பழைய இடத்துக்கே மாற்றம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில், பணியிடமாற்றம் செய்யப்பட்டு சுமார் 300 முதல் 400 கிலோமீட்டர் தூரத்தில் வசித்து வரும் தங்களது அம்மா, அப்பாவை மீண்டும் பழைய இடத்துக்கே மாற்றம் செய்ய வேண்டும் என கதறி அழும் குழந்தைகளின் வீடியோ இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது. இது காண்போரின் மனதை உருக்க வைக்கிறது.