எங்கே மிஸ் ஆனார் தர்ஷன்? – சேரன் விளக்கம்

 

எங்கே மிஸ் ஆனார் தர்ஷன்? – சேரன் விளக்கம்

விரையில் விஜய்சேதுபதியை வைத்து படம் இயக்குவேன் என பிக்பாஸ் சேரன் தெரிவித்துள்ளார். 

விரையில் விஜய்சேதுபதியை வைத்து படம் இயக்குவேன் என பிக்பாஸ் சேரன் தெரிவித்துள்ளார். 

கமலா தியேட்டரில் நம்ம வீட்டு பிள்ளை படத்தை பார்க்க சென்ற இயக்குநர் சேரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,  வெற்றி பெறுவதற்கான அனைத்து திறமைகளும், தகுதிகளும் உடையவர் தர்ஷன். ஆனால் எங்கே மிஸ் ஆனார் என தெரியவில்லை. மக்களுடைய வாக்குகள் தான் வெற்றியாளரை தீர்மானிக்கின்றன.  அந்த வகையில் ஒரு இடத்தில் அவர் மிஸ் ஆகிருக்கிறார். நான் விரும்பிதான் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றார். வித்தியாசமான பாதைகளில் பயணிக்கவே பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றேன்.. நான் இயக்குநர் என்பதை தாண்டி ஒரு நல்ல மனிதன் என்பதை மக்களுக்கு புரிய வைத்துவிட்டேன். விரைவில் விஜய் சேதுபதியை வைத்து ஒரு படம் பண்ணவுள்ளேன்” என்றார்.

tharshan

தர்ஷன் வெளியேற்றம் குறித்து சேரன் அவருடைய ட்விட்டர் பக்கத்தில் நேற்று ‘ஆகச்சிறந்த உழைப்பைக் கொடுத்து விளையாடிய தம்பி தர்சன் இன்று வெளியேற்றப்படுகிறார் என்றால் அது வருத்தத்திற்குரியது.. 100 சதவீதம் பிக் பாஸ் வின்னர் என்ற பட்டமும் பரிசும் பெற முழுத் தகுதியானவர்.அவரின் முயற்சியும் முனைப்பும் அருகில் இருந்து பார்த்தவன் நான்.. அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை’ என்று குறிப்பிட்டிருந்தார்.