“எங்கேயும் சரக்கு கிடைக்கல” விரக்தியில் லாரி ஓட்டுநர் தூக்கிட்டு தற்கொலை!

 

“எங்கேயும் சரக்கு கிடைக்கல”  விரக்தியில் லாரி ஓட்டுநர் தூக்கிட்டு தற்கொலை!

அறந்தாங்கி கட்டுமாவடி முக்கம் பகுதியை சேர்ந்த 50 வயதான லாரி ஓட்டுநர்  அதேபகுதியில்  இருந்த மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். 

 மது கிடைக்காத விரக்தியில் லாரி ஓட்டுநர் தூக்கிட்டு தற்கொலை  செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஊரடங்கு உத்தரவு காரணமாக டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டுள்ளது. இதனால் குடிமகன்கள் விரக்தியின் உச்சத்தில் உள்ளனர். இந்நிலையில் அறந்தாங்கி கட்டுமாவடி முக்கம் பகுதியை சேர்ந்த 50 வயதான லாரி ஓட்டுநர்  அதேபகுதியில்  இருந்த மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். 

ttn

அதேபோல் ஆவுடையார்கோவிலை அடுத்த ஏம்பல் பகுதியைச் சேர்ந்த கருப்பையா விரக்தியில் குடும்பத்துடன் சண்டை போட்டுகொண்டு அறந்தாங்கியில் அறையெடுத்து தங்கியுள்ளார். பின்னர் அங்கேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. அவரின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ttn

முன்னதாக புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த 3 பேர் மது கிடைக்காததால் ஷேவிங் லோஷனை குளிர்பானத்தில் கலந்து குடித்து பலியானது குறிப்பிடத்தக்கது.