எங்கெல்லாம் இறைவன் வாசம் செய்கிறான்!

 

எங்கெல்லாம் இறைவன் வாசம் செய்கிறான்!

புனிதத்திற்கு பொருத்தமாய் ,அடக்கம் அறிந்தவராய்,அகங்காரம் தொலைத்தவராய், அனைவரிடமும் அன்புமழை பொழிந்து வாழ்வினை அர்ப்பணிப்பவர்களுடன் இறைவன் என்றும் அவர்கள் உடனே இருப்பார் என்று பல்வேறு ஜோதிட நூல்களில் கூறியுள்ளனர்

இறைவனை தேடி நாம் எங்கெல்லாமோ அலைந்து கொண்டு இருக்கிறோம் ஆனால் இறைவன் எங்கெல்லாம் இருக்க விரும்புகிறான் என்பதை பற்றி இந்த பதிவில் பார்போம்.

 முகத்தில் அன்புடனும், குணத்தில் பண்புடனும், பெண்மைக்கு உண்மையுடனும், பிரமிக்கும் திறமையுடனும்,பொறுமைக்கு இலக்கணமாய், புனிதத்திற்கு பொருத்தமாய் ,அடக்கம் அறிந்தவராய்,அகங்காரம் தொலைத்தவராய், அனைவரிடமும் அன்புமழை பொழிந்து வாழ்வினை அர்ப்பணிப்பவர்களுடன் இறைவன் என்றும் அவர்கள் உடனே இருப்பார் என்று பல்வேறு ஜோதிட நூல்களில் கூறியுள்ளனர்.மேலும் நல்ல முயற்சிகளுக்கு எப்பொழுதும் தெய்வம் துணை நிற்கும் என்பது நம் முன்னோர்களின் நம்பிக்கையாகும்.

1. காகத்தை போல என்றும் ஒற்றுமையாக இரு சனீஸ்வரன் அருகில் வரமாட்டார்.

saneswaran 1

 

2. நாய் போல நன்றி விசுவாசத்துடன் இரு பைரவர் உனக்கு செல்வத்தை அள்ளித் தருவார்…

 

bhi 1

3. ஆந்தையை போல தீமையிடம் பாதுகாப்பாக விழித்திரு லட்சுமி வீட்டில் வாசம் செய்வாள்…

 

lak 12

4. சிங்கத்தை போல வீரமாக தைரியத்துடன் இரு பார்வதி உன் வீட்டில் வாசம் செய்வாள்…

 

parvath 45

5. அன்னப்பறவை நீரையும் பாலையும் பிரிப்பதை போல அறிவுள்ள நல்ல மனிதர்களுடன் நட்புக் கொள் சரஸ்வதி உன் வீட்டில் வாசம் செய்வாள் …

saras 1

6. எலி போல தொழிலில் ஊழல் செய்யாமலிரு வினைகளை அழிக்கும் விநாயகர் உன் வீடு தேடி வருவார்…

vinayak 12

7. மயிலை போல மகிழ்ச்சியில் எப்பொழுதும் தோகை விரித்தாடு அழகன் முருகன் உன் வீட்டினில் அவதாரிப்பான்…

pek 16

8. உன் மனம் உலக பிரச்னைகளை கடந்து வானத்தில் கருடனை போல பறக்கட்டும் அப்பொழுது கண்ணன் வருவான் அகத்திற்கு…

sri kri

9. தீமை எல்லாவற்றிக்கும் அஞ்சாத காளையாய் எதிர்த்து நில், உலகை படைத்த ஜோதியான தந்தை ஈசனே வருவார் உன் வாழ்வினில் என்றும் துணை நிற்பதற்கு…!!!

 

shiva