எங்கிருந்து கேட்டாலும் ஒரே அளவிலான இசை… அசத்தும் அமேஸானின் அலெக்சா!

எங்கிருந்து கேட்டாலும் ஒரே அளவிலான இசை… அசத்தும் அமேஸானின் அலெக்சா!

பெரிய சைஸ் ஸ்பீக்கர்ஸ்… ஆம்ப்ளிஃபயர் ஊபர் என்று அதிக இடத்தை அடைக்கக்கூடிய ஆடியோ சிஸ்டம் பயன் படுத்தும் சூழல் இப்போது குறைந்து விட்டது.அதற்கு ,மார்க்கெட்டில் ஒவ்வொரு நாளும் புதுசு புதுசாக வந்து கைக்கு  அடக்கமான போர்ட்டபிள் ஸ்பீக்கர்களே சாட்சி.

amazon echo speaker

அந்த வரிசையில் அமேசான் நிறுவனம் ‘எக்கோ இன்புட்’ என்ற பெயரில் போர்ட்டபிள் ஸ்மார்ட் ஸ்பீக்கர்ஸை இந்தியாவில் லான்ச் செய்துள்ளது.இந்த ஸ்பீக்கர் போர்ட்டபிள் என்பதால் நீங்கள் இதனை உங்கள்  வசதிக்கேற்றவாறு எங்கு வேண்டுமானாலும் எடுத்து செல்லலாம்,மேலும் இதனை அடிக்கடி சார்ஜ் செய்ய வேண்டிய தேவை இருக்காது, ஒரு முறை சார்ச் போட்டால் தொடர்ந்து  10 மணி நேரம் வரை இசையைக் கேட்க முடியும் என்பது மற்ற நிறுவன ஸ்பீக்கர்களுக்கு சவால் விடும் தன்மையில் இருக்கிறது.

தவிர,இந்த ஸ்பீக்கரை அறையின் எந்த இடத்தில் வைத்து விட்டு எங்கிருந்து இசையைக்  கேட்டாலும் 360 டிகிரியில் ஒரே ஒலி அளவில் கேட்க முடியும்  என்பது இதன் கூடுதல் சிறப்பு. 4,800mAh பேட்டரி அமைப்பு கொண்டுள்ளது, இதன் விலை ரூ.4,999 மட்டுமே! இது கருப்பு வண்ணத்தில் மிகவும் ஸ்டைலிஷ் வடிவில் உருவாக்கப்பட்டள்ளது,மேலும் இதில் வாய்ஸ் ரெகார்ட் ஆப்சன்சும் வாய்ஸ் recognition மற்றும் வாய்ஸ் ரெகார்டிங்ஸ் டெலீட் செய்யும் வசதியும் உள்ளது 

echo speaker

“வெளியான முதல் நாளே இந்திய கஸ்டமர்களிடம்  அலெக்சாவுக்கு பெரிய  வரவேற்பு கிடைத்திருக்கிறது.மக்கள் இந்த மாதிரி ஹாண்ட்ஸ் ஃப்ரீ ஸ்பீக்கர்கள் குறித்து சொல்லவிருக்கிற ஃபீட் பேக்கை எதிர்பார்த்து காத்திருப்பதாகவும்  
அமேசான் இந்திய தலைமை நிர்வாகி திரு. பராக் குப்தா ட்வீட்டை தட்டிவிட்டிருக்கிறார்.

கேட்டுட்டு நீங்களும் மறக்காமல் ஒரு கமெண்ட்டை தட்டி விடுங்க மக்கா..