‘எங்கள் வீட்டில் எல்லா நாளும் சண்டை தான்’: ரவுண்டு கட்டி அமர்ந்து கானா பாடல் பாடும் ஹவுஸ்மேட்ஸ்! 

 

‘எங்கள் வீட்டில் எல்லா நாளும் சண்டை தான்’: ரவுண்டு கட்டி அமர்ந்து கானா பாடல் பாடும் ஹவுஸ்மேட்ஸ்! 

பிக் பாஸ் 3யின் இன்றைக்கான கடைசி புரோமோ தற்போது வெளியாகியுள்ளது.   

சென்னை: பிக் பாஸ் 3யின் இன்றைக்கான கடைசி புரோமோ தற்போது வெளியாகியுள்ளது.   

பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்து 17 நாட்கள் வெற்றிகரமாக கடந்து விட்டது. நிகழ்ச்சி தொடங்கிய முதல் சண்டை சச்சரவுமாகச் சென்று கொண்டு இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் வீட்டில் நடக்கும் அனைத்து விஷயத்திலும் வனிதா மூக்கை  நுழைப்பது தான். அதனால் கண்டிப்பாக அவரை இந்த வாரம் வீட்டிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்று ஹவுஸ் மேட்ஸ் நாமினேட் செய்துள்ளனர். 

இந்த நிலையில் இன்றைக்கான கடைசி புரோமோ தற்போது வெளியாகியுள்ளது. அந்த புரோமோவில் ஹவுஸ் மேட்ஸ் அனைவரும் ஒன்று குடி அமர்ந்து கானா பாடல் பாடி அசதி வருகின்றனர். அதில் ‘எங்கள் வீட்டில் எல்லா நாளும் சண்டை தான்….சண்டையில் ஒடஞ்சது சாண்டியோட மண்ட தான்…. என்ன நடந்தாலும் யார் போனாலும் உயிர் கொடுப்பது நீங்கள் தான் உயிரை எடுப்பதும் நீங்கள் தான்’ என்று பாட்டு பாடி செம்ம ஃபன் செய்து வருவது போல் காட்டப்பட்டுள்ளது. 

இதை பார்த்த ரசிகர்கள் ‘கடைசி நாள் பாட வேண்டிய பாடல் தான் இது…..என்ன டா இப்பவே பாடுறீங்க’ என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.