எங்கள் புகைப்படங்களை திருடுவதை நிறுத்துங்கள் – ஸ்டார்ட்அப் நிறுவனத்துக்கு டிவிட்டர் எச்சரிக்கை

 

எங்கள் புகைப்படங்களை திருடுவதை நிறுத்துங்கள் – ஸ்டார்ட்அப் நிறுவனத்துக்கு டிவிட்டர் எச்சரிக்கை

தங்கள் புகைப்படங்களை திருடுவதை நிறுத்துமாறு ஒரு ஸ்டார்ட்-அப் நிறுவனத்துக்கு டிவிட்டர் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கலிபோர்னியா: தங்கள் புகைப்படங்களை திருடுவதை நிறுத்துமாறு ஒரு ஸ்டார்ட்-அப் நிறுவனத்துக்கு டிவிட்டர் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சட்ட அமலாக்கம் தொடர்பான ஒரு மொபைல் ஆப் க்ளியர்வியூ ஏஐ ஆகும். சமூக வலைதளங்களான பேஸ்புக், டிவிட்டர், யூடியூப் போன்ற தளங்களில் இருந்து சுமார் 300 கோடிக்கும் அதிகமான புகைப்படங்களை இந்த ஆப் எடுத்து கையாண்டுள்ளது. இந்நிலையில், தங்கள் தளத்தில் இருந்து புகைப்படங்கள் மற்றும் தகவல்களை எடுப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என க்ளியர்வியூ ஏஐ ஆப்பிற்கு டிவிட்டர் நிர்வாகம் கடிதம் அனுப்பியுள்ளதாக தி நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் தகவல் வெளிவந்துள்ளது.

மேலும் 600-க்கும் அதிகமான சட்ட அமலாக்க முகவர்கள் இந்த க்ளியர்வியூ ஏஐ ஆப்-ஐ பயன்படுத்துகின்றன. அதில் அமெரிக்காவின் புலன் விசாரணை கூட்டாட்சிப் பணியகம் (FBI) மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு துறையும் அடங்கும். அதனால் பல சந்தேக வழக்குகளில் குற்றவாளிகளை கண்டறிய இந்த க்ளியர்வியூ ஏஐ ஆப் உதவி செய்துள்ளது. ஆனால் இந்த மொபைல் ஆப் யாருக்கு சொந்தம் என்பதில் மர்மம் நிலவி வருகிறது.