எங்கள் தேர்தல் அறிக்கையை திமுக காப்பி அடிக்க கூடாது; சாடும் அன்புமணி ராமதாஸ்!

 

எங்கள் தேர்தல் அறிக்கையை திமுக காப்பி அடிக்க கூடாது; சாடும் அன்புமணி ராமதாஸ்!

எங்கள் தேர்தல் அறிக்கையை திமுக காப்பி அடிக்க கூடாது என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்

சென்னை: எங்கள் தேர்தல் அறிக்கையை திமுக காப்பி அடிக்க கூடாது என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏப்ரல் 11 முதல் மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தேர்தல் முடிவுகள் மே 23-ம் தேதி வெளியாகிறது. தமிழகத்தை பொறுத்தவரை காலியாக உள்ள 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடைபெறவுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமக, தங்களது தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டது. அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் இதனை வெளியிட்டார்.

“தன்னாட்சி அதிகாரம் பெற்ற தமிழகம் படைப்போம்” என்ற முழக்கத்துடன் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது. அதில், மாநில சுயாட்சி, நல்ல ஆளுகை, சமூக நீதி, தனியார் துறை இடஒதுக்கீடு, வருமான வரி, ஜிஎஸ்டி, மதுபுகை ஒழிப்பு, அரசு ஊழியர்கள் நலன், வேலையில்லா இளைஞர்களுக்கு நிதியுதவி, கல்வி, தமிழ் இலக்கமுறை நூலகம், 7 தமிழர்கள் விடுதலை, கட்சத்தீவு மீட்பு, தேர்தல் சீர்திருத்தங்கள், பெண்கள் பாதுகாப்பு, மாற்றுத்திறனாளிகள் நலன், முத்தலாக், பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு, இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி ராமதாஸ், தமிழ்நாட்டு மக்களின் நலன் காக்கப்படும். இதை மனதில் வைத்தே இந்த தேர்தல் அறிக்கைத் தயாரிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் உரிமைகள் மீட்டெடுக்கப்பட வேண்டும். திமுக எங்களது தேர்தல் அறிக்கையை காப்பி அடிக்கக் கூடாது என்றார்.