எங்கள் சேவை தொடங்கிவிட்டது… காத்திருந்தமைக்கு நன்றி! மகிழ்ச்சியுடன் பதிவிட்ட யெஸ் வங்கி!! 

 

எங்கள் சேவை தொடங்கிவிட்டது… காத்திருந்தமைக்கு நன்றி! மகிழ்ச்சியுடன் பதிவிட்ட யெஸ் வங்கி!! 

நாட்டின் முன்னணி தனியார் வங்கிகளில் ஒன்றாக விளங்கிய யெஸ் பேங்க் கடந்த சில ஆண்டுகளாக தடுமாற்றத்தை சந்தித்து வந்தது. குறிப்பாக கடந்த சில மாதங்களாக அந்த வங்கியின் நிதி நிலவரம் மிகவும் சிக்கலான நிலையில் இருந்தது. இந்நிலையில் அண்மையில் ரிசர்வ் வங்கி யாரும் எதிர்பாராத வகையில் யெஸ் பேங்குக்கு தடை விதித்தது. மேலும், யெஸ் பேங்கின் இயக்குனர்கள் குழுவை கலைத்து அந்த வங்கியை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.

இதனால் வங்கியிலிருந்து ரூ.50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணம் எடுக்க தடை விதிக்கப்பட்டதால் அந்த வங்கியின் வாடிக்கையாளர்கள் கடுமையாக  பாதிக்கப்பட்டனர். இதற்கிடையில் மார்ச் 18 ஆம் தேதி முதல் யெஸ் வங்கி செயல்பாட்டுக்குவரும் என  ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் தெரிவித்திருந்தார். யெஸ் வங்கியின் பங்குகளில் ரூ.10 ஆயிரம் கோடியை முதலீடு செய்து அதனை ஸ்டேட் பாரத் வங்கி கையில் எடுத்துள்ளது. 

yes bank

இந்நிலையில் யெஸ் வங்கி மீண்டும் சேவைக்கு வந்துவிட்டதாக அதன் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த பதிவில்,  “எங்கள் வங்கிச் சேவைகள் தற்போது செயல்பாட்டிற்கு வந்துள்ளன. இனி நீங்கள் எங்களின் முழுமையான சேவையை பெறலாம். பொறுமையாக ஒத்துழைப்பு கொடுத்ததற்கு நன்றி” என குறிப்பிட்டுள்ளது.