‘எங்கள் ஒட்டு விற்பனைக்கு அல்ல’ : ஊர் எல்லையில் கிராம மக்கள் வைத்த அறிவிப்புப் பலகை !

 

‘எங்கள் ஒட்டு விற்பனைக்கு அல்ல’ : ஊர் எல்லையில் கிராம மக்கள் வைத்த அறிவிப்புப் பலகை !

பெரியக்கோட்டை ஊராட்சி தெக்கூர் என்னும் பகுதியில் எங்கள் ஓட்டு விற்பனைக்கு அல்ல என்று ஒரு அறிவிப்புப் பலகை ஒன்று வைத்துள்ளனர்.

தமிழ்நாட்டில் நடக்கும் ஒவ்வொரு தேர்தலின் போதும் வேட்பாளர்கள் பணம் கொடுப்பதும், வாக்காளர்கள் அதனை வாங்குவதும் வாடிக்கையாகி விட்டது. வாக்குக்குப் பணம் வாங்கவும் கூடாது, கொடுக்கவும் கூடாது என்று என்ன தான் பிரச்சாரம் நடத்தினால் மக்கள் அதனைக் கேட்பதாக இல்லை. ஆனால், வாக்குக்குப் பணம் வாங்காத ஆட்களும் இருக்கத் தான் செய்கிறார்கள். ஒரு கிராம மக்கள், ஓட்டுக்குப் பணம் கொடுக்க வேண்டாம் என்று கூறி பதாகை ஒன்று வைத்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ttn

சிவகங்கை மாவட்டம், பெரியக்கோட்டை ஊராட்சி தெக்கூர் என்னும் பகுதியில் எங்கள் ஓட்டு விற்பனைக்கு அல்ல என்று ஒரு அறிவிப்புப் பலகை ஒன்று வைத்துள்ளனர். இதனை, அப்பகுதி  வ.உ.சி. இளைஞர் நற்பணி மன்றத்தினரும், மகளிர் மன்றத்தினரும் இணைந்து வைத்துள்ளனர். இதனைப் பற்றி அனைத்து வேட்பாளர்களுக்கும் கடிதமும் எழுதியுள்ளனர். 

ttn

இது குறித்துப் பேசிய  வ.உ.சி. இளைஞர் நற்பணி மன்ற ஒருங்கிணைப்பாளர், “எங்கள் ஊரில் மொத்தம் 500 ஓட்டுகள் உள்ளன. ஓட்டுக்குப் பணம் வாங்குவது நாட்டுக்கும் நமக்கும் அவமானம் என்று மக்களுக்குப் புரிய வைத்தோம். அதனை மக்களும் புரிந்து கொண்டார்கள். அதனால், ஊர் எல்லையிலேயே இந்த அறிவிப்புப் பலகையை வைத்து விட்டோம். எங்கள் பிரச்சனைகளைத் தீர்ப்பவராக இருந்தால் மட்டுமே அவர்கள் எங்களிடம் வாக்கு கேட்டு வரவேண்டும்” என்று தெரிவித்தார்.