எங்கள் எழுவரை விடுவியுங்கள்: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள ராமச்சந்திரன் பிரதமருக்கு கடிதம்..!

 

எங்கள் எழுவரை விடுவியுங்கள்: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள ராமச்சந்திரன் பிரதமருக்கு கடிதம்..!

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சம்பந்தப்பட்டிருப்பதாக முருகன், பேரறிவாளன், நந்தினி, ராபர்ட் பயஸ், சாந்தன், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சம்பந்தப்பட்டிருப்பதாக முருகன், பேரறிவாளன், நந்தினி, ராபர்ட் பயஸ், சாந்தன், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் 7 பேருக்கும் தூக்குத்தண்டனை வழங்க உச்சநீதிமன்றம் பிறகு அதனை ஆயுள் தண்டனையாக மாற்றியது. சிறையில் அடைக்கப்பட்டு 28 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. இந்த 7 பேரில், பேரறிவாளன் தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரியும்,  ராபர்ட் பயஸ் பரோல் கேட்டும் மனு அளித்திருந்தனர். மீதமுள்ள 5 பேரும் எந்த மனுவும் இதுவரை கொடுக்கவில்லை. 

Rajiv gandhi murder case

இந்நிலையில், மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரவிச்சந்திரன் சிறையின் கண்காணிப்பாளர் உதவியுடன் இன்று பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார்.  அந்த கடிதத்தில், பஞ்சாப் முதல்வர் கொலை வழக்கில் கைதானவர்களையும் , காலிஸ்தான் தீவிரவாதிகளையும் வெளியிடுவதில் மத்திய அரசு இரட்டை நிலைப்பாடு கொண்டுள்ளது என்றும் தமிழக அரசு கடந்த ஆண்டு எங்கள் 7 பேரையும் விடுவிக்கப் பரிந்துரை செய்ததை மத்திய அரசு நிராகரித்ததையும் ரவிச்சந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

Narendra modi

அதனையடுத்து, 28 ஆண்டுகளாகச் சிறையில் வாடும் எங்கள் 7 பேரையும் விடுவிக்க ஆளுநரை வலியுறுத்த வேண்டும் என்று மோடிக்குக் கடிதத்தின் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.