எங்களுக்கு 24 மணிநேரமும் தண்ணீர் கிடைக்கிறது: ராஜீவ்காந்தி மருத்துவமனை விளக்கம்!

 

எங்களுக்கு 24 மணிநேரமும் தண்ணீர் கிடைக்கிறது:  ராஜீவ்காந்தி மருத்துவமனை விளக்கம்!

சென்னையில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது. அனைத்துப் பகுதிகளிலும் தண்ணீருக்காக மக்கள் குடங்களுடன் காத்துக் கிடக்கின்றனர்.

சென்னை: தண்ணீர் பற்றாக்குறை இல்லை, 24 மணிநேரமும் தண்ணீர் கிடைக்கிறது என்று சென்னை ராஜீவ்  காந்தி மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

சென்னையில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது. அனைத்துப் பகுதிகளிலும் தண்ணீருக்காக மக்கள் குடங்களுடன் காத்துக் கிடக்கின்றனர். தண்ணீர் பற்றாக்குறையால் மக்களின் இயல்பு வாழ்க்கை  முடங்கி உள்ளது. பள்ளிகள். அலுவலகம், மருத்துவமனை  என அனைத்து இடங்களிலும் இதே பிரச்னை தான் பின் தொடர்கிறது. பெரும்பாலான பள்ளிகள் அரைநாள் பள்ளிக்கூடம் என்ற நிலை மாறி தற்போது விடுமுறை அளிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. 

water

அந்த வகையில் சென்னையில் அமைந்துள்ள ராஜீவ்  காந்தி மருத்துவமனை பலராலும் அறியப்பட்டது. இங்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். சென்னையில் ஏற்பட்டுள்ள தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக ராஜிவ் காந்தி மருத்துவமனையின் கழிப்பறைகள் மூடப்பட்டுள்ளதாகவும், அதனால் நோயாளிகள் அவதிப்பட்டு வருவதாகவும் சில நாட்களுக்கு முன்பு செய்திகள் பரவின. 

gh

இந்நிலையில் இந்த செய்தியை ராஜீவ்  காந்தி மருத்துவமனை மறுத்துள்ளது. இதுகுறித்து விளக்கமளித்துள்ள மருத்துவமனை நிர்வாகம், வழக்கமான பராமரிப்பு பணிகளுக்காகத் தான்  கழிவறைகள் தற்காலிகமாக மூடப்பட்டது. அதற்கான மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, மருத்துவமனையில் எந்த தண்ணீர் தட்டுப்பாடும் இல்லை. 24 மணிநேரமும் தண்ணீர் கிடைக்கிறது’ என்று விளக்கமளித்துள்ளது.