எங்களுக்கு வாக்களிக்க வேண்டுமா, வேண்டாமா என்பதை நீங்க முடிவு எடுங்க… ஆனால் எங்க நோக்கங்களை சந்தேகிக்க வேண்டாம்….. முஸ்லிம்களுக்கு ராஜ்ராத் சிங் வேண்டுகோள்

 

எங்களுக்கு வாக்களிக்க வேண்டுமா, வேண்டாமா என்பதை நீங்க முடிவு எடுங்க… ஆனால் எங்க நோக்கங்களை சந்தேகிக்க வேண்டாம்….. முஸ்லிம்களுக்கு ராஜ்ராத் சிங் வேண்டுகோள்

எங்களுக்கு வாக்களிக்க வேண்டுமா, வேண்டாமா என்பதை நீங்க முடிவு எடுங்க. ஆனால் எங்க நோக்கங்களை சந்தேகிக்க வேண்டாம் என முஸ்லிம் மக்களிடம் ராஜ்ராத் சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

டெல்லி சட்டப்பேரவைக்கு பிப்ரவரி 8ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. பா.ஜ.க.வின் மூத்த தலைவரும், மத்திய பாதுகாப்பு துறை அமைச்சருமான ராஜ்நாத் சிங் டெல்லியில் நேற்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். தேர்தல் பிரச்சார கூட்டத்தில் அவர் பேசுகையில் கூறியதாவது:

தேர்தல் பிரச்சார கூட்டம் (கோப்பு படம்)

என்னுடைய முஸ்லிம் சகோதரர்களுக்கு  ஒன்றை சொல்லி கொள்ள விரும்புகிறேன். நீங்கள் எங்களுக்கு வாக்களிக்க வேண்டுமா, இல்லையா என்பதை நீங்கள் தீர்மானியுங்கள். ஆனால் எங்களது நோக்கங்களை சந்தேகிக்க வேண்டாம். யாரும் உங்களை தொட முடியாது. உங்களது குடியுரிமையை பறிப்பதை மறந்து விடுங்கள். இவ்வாறு அவர் பேசினார். 

முஸ்லிம் சமுதாயத்தினர்

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்க தேசம் ஆகிய நாடுகளிலிருந்து மத துன்புறுத்தல் காரணமாக இந்தியாவுக்கு அகதிகளாக வந்த முஸ்லிம் அல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்கும் வகையில் குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. இந்த சட்டத்தை அமல்படுத்தினால் தங்களது குடியுரிமை பறிக்கப்படும் என்ற தவறான பயத்தின் காரணமாக ஒரு பகுதி மக்கள் போராடி வருகின்றனர். இந்த சூழ்நிலையில், அவர்களது பயத்தை போக்கும் வகையில் உங்களது குடியுரிமை பறிக்கப்படும் என்பதை மறந்து விடுங்கள் என  ராஜ்ராத் சிங் தெரிவித்துள்ளார்.