எங்களுக்கு எந்த நிபந்தனையும் இல்லை: திருமாவளவன்

 

எங்களுக்கு எந்த நிபந்தனையும் இல்லை: திருமாவளவன்

திமுக அணியில் எங்களுக்கு எந்த நிபந்தனையும் இல்லை என விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

திருச்சி: திமுக அணியில் எங்களுக்கு எந்த நிபந்தனையும் இல்லை என விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில், திமுக அணியில் எங்களுக்கு எந்த நிபந்தனையும் விதிக்கப்படவில்லை. தொகுதி குறித்து நிர்பந்திக்க கூடாது என்று எதுவும் கூறவில்லை. எங்கள் அணி பலமாக உள்ளது. திருச்சி ஆர்ப்பாட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திமுக அணியில் இருந்து தங்களை வெளியேற்ற சிலர் சதி செய்வதாக கூறியுள்ள குற்றச்சாட்டு குறித்து கருத்து கூற விரும்பவில்லை.

அணையை தடுக்க வேண்டும் என்றால் அணி பலமாக இருக்க வேண்டும். தமிழகத்தை காக்கவும், தேசத்தை மதவாத பிடியில் இருந்து காக்கவும் இதுபோன்ற பலமான அணி தேவை. கர்நாடகாவில் மேகதாது அணை கட்ட அனுமதி அளித்ததை கண்டித்து திருச்சியில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தோழமை கட்சி தலைவர்கள் பங்கேற்ற போராட்டம் மிகுந்த எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சியில் டிசம்பர் 10-ம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தேசம் காப்போம் மாநாடு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் கம்யூனிஸ்ட் தலைவர்கள், அனைத்து கட்சி தலைவர்கள் பங்கேற்பார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது. அன்று டெல்லியில் ராகுல் காந்தி தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெறுகிறது. எனவே டிசம்பர் 10-ம் தேதி திருச்சியில் நடைபெறவிருந்த தேசம் காப்போம் மாநாடு ஜனவரி மாதம் நடைபெறும். இதற்கான தேதி பிறகு அறிவிக்கப்படும் என்றார்.