எங்களுக்கும் கோடி கோடியா சம்பளம் கொடுங்க அப்ப நாங்களும் நிவாரணம் கொடுக்குறோம்! விஜயை கிண்டலடித்த காமெடி நடிகர்

 

எங்களுக்கும் கோடி கோடியா சம்பளம் கொடுங்க அப்ப நாங்களும் நிவாரணம் கொடுக்குறோம்! விஜயை கிண்டலடித்த காமெடி நடிகர்

நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் தளபதியாக இருக்கிறார். ஆண்டுக்கு ஒருபடம் கொடுத்தாலும் அவரின் கிரேஸ் இன்னும் ரசிகர்கள் மத்தியில் குறையவில்லை. வெற்றி, தோல்வி என வாழ்க்கையில்  படிப்படியாக முன்னேறிய தளபதி விஜய்க்கு எப்போதும் உறுதுணையாக இருப்பது அவரது ரசிகர்கள். 

நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் தளபதியாக இருக்கிறார். ஆண்டுக்கு ஒருபடம் கொடுத்தாலும் அவரின் கிரேஸ் இன்னும் ரசிகர்கள் மத்தியில் குறையவில்லை. வெற்றி, தோல்வி என வாழ்க்கையில்  படிப்படியாக முன்னேறிய தளபதி விஜய்க்கு எப்போதும் உறுதுணையாக இருப்பது அவரது ரசிகர்கள். இதனிடையே கொரோனா தொற்று காரணமாக திரைக்கலைஞர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.  

tt

இதன் காரணமாக கொரோனா நிவாரணப் பணிகளுக்காக நடிகர் விஜய் 1.30 கோடி நிதி உதவி வழங்கியுள்ளார்.  தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு 50 லட்சம் , பிரதமர் நிவாரண நிதிக்கு 25 லட்சமும் விஜய் நிதி உதவி செய்துள்ளார். கேரளாவுக்கு 10 லட்சம், கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு தலா 5 லட்சம் நிதி உதவி செய்துள்ளார். அதுமட்டுமின்றி ரசிகர்கள் சங்கங்களின் உறுப்பினர்களுக்கு பணம் அனுப்பி கஷ்டப்படும் குடும்பங்களுக்கு உதவி செய்ய சொல்லியிருந்தார். 

karunakaran tweet

இந்நிலையில் பாண்டிச்சேரி மாநிலத்திற்கு 5 லட்சம் அனுப்பிய விஜய்யை அதன் முதலமைச்சர் பாராட்டி அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில் அனைத்து நடிகர்களும் இதுபோன்று உதவ முன்வர வேண்டும் என கேட்டுக் கொண்டிருந்தார். இதை கண்ட கருணாகரன் தன் ட்விட்டர் பக்கத்தில், விஜய்யை போல் எங்களுக்கும் அதிக சம்பளம் கொடுங்கள் நாங்களும் செய்கிறோம் என பதிவிட்டிருந்தது பல்வேறு சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து காமெடி நடிகர் கருணாகரன் அந்த ட்வீட்டை டெலிட் செய்துள்ளார்.