எங்களுக்குப் பாராட்டு வேண்டாம்… நிதி உதவிதான் வேண்டும்! – கேரள நிதி அமைச்சர் காட்டம்

எங்களுக்குப் பாராட்டு வேண்டாம்… நிதி உதவிதான் வேண்டும்! – கேரள நிதி அமைச்சர் காட்டம்

பிரதமர் மோடி இன்று நாட்டு மக்களிடம் பேசும்போது ஊரடங்கை நீட்டிப்பதாக அறிவித்தார். ஆனால், எந்த ஒரு பொருளாதார திட்டம் பற்றிய அறிவிப்பையும் அவர் வெளியிடவில்லை. இது குறித்து கேரள நிதி அமைச்சர் தாமஸ் ஐசக்கிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

கொரோனாவை எதிர்த்து போராடுவதில் பாராட்டு தேவையில்லை நிதி உதவித் திட்டங்களே தேவை என்று கேரள நிதி அமைச்சர் தாமஸ் ஐசக் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி இன்று நாட்டு மக்களிடம் பேசும்போது ஊரடங்கை நீட்டிப்பதாக அறிவித்தார். ஆனால், எந்த ஒரு பொருளாதார திட்டம் பற்றிய அறிவிப்பையும் அவர் வெளியிடவில்லை. இது குறித்து கேரள நிதி அமைச்சர் தாமஸ் ஐசக்கிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

thomas-issc-78

அதற்கு அவர், “மாநிலத்துக்குத் தேவையான பொருளாதார மீட்பு உதவித் திட்டம் எதையும் அறிவிக்காமல் மாநிலத்தைப் புகழ்ந்து பேசுவதால் என்ன ஆகிவிடப் போகிறது. இந்த மோசமான நிலையிலும் வங்கிகள் மாநிலங்களிடமிருந்து மிக அதிக அளவில் வட்டியை வசூலிக்கின்றன. இதனால் கேரளா மத்திய அரசிடமிருந்து நிதி உதவியை எதிர்பார்க்கிறது. இந்த தொற்று நோய் பரவுதலைத் தடுக்க கேரளா மிகச்சிறப்பான வழிகளைக் கையாண்டு வருகிறது என்று மோடி பாராட்டினார். எங்களுக்கு பாராட்டு தேவையில்லை, நிதி உதவிதான் தேவைப்படுகிறது” என்றார்.