“எங்களின் மொழி புரியவில்லை என்றால் தோட்டாக்களின் மொழி புரியும்”…யோகி ஆதித்யநாத்தின் சர்ச்சை பேச்சு!

 

“எங்களின் மொழி புரியவில்லை என்றால் தோட்டாக்களின் மொழி புரியும்”…யோகி ஆதித்யநாத்தின் சர்ச்சை பேச்சு!

டெல்லியில் வரும் 8 ஆம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. அதற்காக அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன.

டெல்லியில் வரும் 8 ஆம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. அதற்காக அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் அவரவர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதே போல, சமீபத்தில் டெல்லியில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளரை ஆதரித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்ட வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனைத்தொடர்ந்து உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பா.ஜ.க வேட்பாளரை ஆதரித்து  டெல்லி ரோஹிணி பகுதியில்  பிரச்சாரம் மேற்கொண்டார். 

ttn

அப்போது பேசிய யோகி ஆதித்யநாத்,”ஜனநாயகத்தின் மிகப் பெரிய சக்தி மக்களின் ஓட்டுகள் தான். புல்லெட்டுகள் இல்லை. அரவிந்த் கெஜ்ரிவாலால் டெல்லி மக்களுக்குச் சுத்தமான குடிநீரைக் கூட வழங்கமுடியவில்லை. அவர் நாட்டின் வளர்ச்சிக்காகப் பணம் கொடுக்க மாட்டார். ஆனால், ஷாஹின் பாத் போராட்டத்தில் ஈடுபடும் மக்களுக்குப் பிரியாணி வாங்கி கொடுப்பதற்காகப் பணம் கொடுக்கிறார். நடக்கவிருக்கும் கன்வர் யாத்ராவில் அசம்பாவிதங்கள் நடக்க உள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது.

ttn

அதில் சிவ பக்தர்களுக்கு ஏதேனும் நடந்தால் நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம். அவர்களுக்கு எங்களின் மொழி புரியவில்லை என்றால் தோட்டாக்களின் மொழி புரியும்.” என்று கூறினார். கன்வர் யாத்திரையில் மக்களுக்கு ஏதேனும் நேர்ந்தால் அதற்கு காரணமானவர்கள் சுட்டுக் கொல்லப்படுவார்கள் என்று மறைமுகமாக யோகி ஆதித்யநாத் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.