“எங்களிடம் கொஞ்சம் காய்கறிகளும் தண்ணீர் மட்டுமே உள்ளது; காப்பாற்றுங்கள்” : சீனாவில் சிக்கியுள்ள இந்திய தம்பதி கதறல்!

 

“எங்களிடம் கொஞ்சம் காய்கறிகளும் தண்ணீர் மட்டுமே உள்ளது; காப்பாற்றுங்கள்” : சீனாவில் சிக்கியுள்ள இந்திய தம்பதி கதறல்!

இங்கு யாரும் இல்லை. இப்போது எங்களிடம் கொஞ்சம் காய்கறிகளும் தண்ணீர் கேன்கள் மட்டுமே உள்ளன’ என்று கூறியிருந்தனர். 

சீனாவில்  கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உயிரிழந்துள்ளவர்களின் எண்ணிக்கை  2,004 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், 136 பேர் உயிரிழந்ததாகவும், 1749 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த வைரஸ் தாக்கத்தால் இதுவரை  74,185 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ttn

இதனிடையே கடந்த சனிக்கிழமை வுஹான் நகரில் வசித்து வரும் உத்திர பிரதேசத்தைச் சேர்ந்த  ஆஷிஷ் யாதவ் – நேகா யாதவ்  தம்பதியினர்  வீடியோ ஒன்றை வெளியிட்டனர். அதில், வுகான் டெக்ஸ்டைல் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வரும் நாங்கள் அங்குள்ள பலக்லைக்கழக குடியிருப்பில் வசித்து வருகிறோம். இங்கு யாரும் இல்லை. இப்போது எங்களிடம் கொஞ்சம் காய்கறிகளும் தண்ணீர் கேன்கள் மட்டுமே உள்ளன’ என்று கூறியிருந்தனர். 

ttn

இதனையடுத்து மறுநாள் இவர்கள் வெளியிட்ட மற்றொரு வீடியோவில், ‘வானிலை மிக மோசமாக உள்ளது. மழை தொடர்ந்து பெய்து வருகிறது. எங்களுக்கு அதிகாரிகள் காய்கறிகள், தண்ணீரை வழங்கினர். அதுவும் விரைவில் தீர்ந்துபோய் விடும். எங்களுக்கு இந்திய அரசு மீட்க வேண்டும்’ என்று கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து  சீனாவில் உள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தனது டிவிட்டர் பக்கத்தில்,  சீனாவுக்கு உணவுப்பொருட்களை வழங்க இந்திய விமானம் ஒன்று சீனாவுக்கு வரவுள்ளது. இந்தியாவுக்கு வர விரும்பும் இந்தியர்கள் அதில் வரலாம் என்று குறிப்பிட்டு தொடர்புகொள்வதற்கான எண்களையும் பதிவிட்டுள்ளது.