எக்ஸ்பாக்ஸ் நெட்வொர்க்கில் பிழை கண்டுபிடித்தால் 20 ஆயிரம் டாலர்கள் வரை வெகுமதி – ஹேக்கர்களுக்கு அழைப்பு

 

எக்ஸ்பாக்ஸ் நெட்வொர்க்கில் பிழை கண்டுபிடித்தால் 20 ஆயிரம் டாலர்கள் வரை வெகுமதி – ஹேக்கர்களுக்கு அழைப்பு

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் எக்ஸ்பாக்ஸ் நெட்வொர்க்கில் பிழை கண்டுபிடித்தால் 20 ஆயிரம் டாலர்கள் வரை வெகுமதி வழங்கப்படும் என ஹேக்கர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கலிபோர்னியா: மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் எக்ஸ்பாக்ஸ் நெட்வொர்க்கில் பிழை கண்டுபிடித்தால் 20 ஆயிரம் டாலர்கள் வரை வெகுமதி வழங்கப்படும் என ஹேக்கர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மைக்ரோசாப்ட் நிறுவனம் தங்களது எக்ஸ்பாக்ஸ் நெட்வொர்க் அல்லது சேவையில் பிழை கண்டுபிடித்தால் 20 ஆயிரம் டாலர்கள் வரை வெகுமதி வழங்கப்படும் என ஹேக்கர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. இதன் மூலம் தங்கள் சேவையின் பாதுகாப்பில் உள்ள ஓட்டைகளை நீக்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. உலகில் உள்ள கேமர்கள், ஹேக்கர்கள் மற்றும் தொழில்நுட்ப பாதுகாப்பு வல்லுநர்கள் யாரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளலாம்.

microsoft

பிழைகளின் தன்மைக்கு ஏற்ப வெகுமதி அளிக்கப்படும் என்று மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதாவது குறைந்த அளவு பிழை கண்டுபிடிப்பவர்களுக்கு 500 டாலர்கள் முதல் வெகுமதி அளிக்கப்படும். பெரிய அளவில் பாதுகாப்பு அம்சத்தில் பிழை கண்டுபிடிப்பவருக்கு அதிகபட்சமாக 20 ஆயிரம் டாலர்கள் வரை வெகுமதி வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் இதேபோல தங்களுடைய எட்ஜ் பிரவுசர், விண்டோஸ் இன்சைடர் பிரிவியூ பில்ட், ஆபிஸ் 365, அசர் க்ளவுடு உள்ளிட்டவற்றில் பிழை கண்டுபிடிப்பவர்களுகும் வெகுமதி வழங்க மைக்ரோசாப்ட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. குறிப்பாக அசர் க்ளவுடில் பிழை கண்டுபிடிப்பவருக்கு அதிகபட்சமாக மூன்று லட்சம் டாலர்கள் வரை வெகுமதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.