எக்ஸ்க்யூஸ்மீ, பக்கத்துல பாத்ரூம் எங்கயிருக்கு என கேட்க இனி கூச்சம் வேண்டாம்!

 

எக்ஸ்க்யூஸ்மீ, பக்கத்துல பாத்ரூம் எங்கயிருக்கு என கேட்க இனி கூச்சம் வேண்டாம்!

நாடாளுமன்ற தேர்தலின்போது கேரளாவுக்கு பரப்புரைக்கு வந்த உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், சுகாதாரத்துறையில் எப்படி செயல்படவேண்டும் என்பதை கேரள முதல்வர் மற்றும் அதிகாரிகள் அவருடைய மாநிலத்திற்கு வந்து கற்றுக்கொள்ள வேண்டும் என பேசினார்.

நாடாளுமன்ற தேர்தலின்போது கேரளாவுக்கு பரப்புரைக்கு வந்த உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், சுகாதாரத்துறையில் எப்படி செயல்படவேண்டும் என்பதை கேரள முதல்வர் மற்றும் அதிகாரிகள் அவருடைய மாநிலத்திற்கு வந்து கற்றுக்கொள்ள வேண்டும் என பேசினார். ஒவ்வொரு மாநிலமும் சுகாதாரத்துறையில் எந்த இடத்தில் இருக்கின்றன என்ற மதிப்பீடு பட்டியலை நிதி ஆயோக் இந்த வாரம் வெளியிட்டது. அதில் கேரளா முதலிடத்தையும், உத்தர பிரதேசம் கடைசி இடத்தையும் பிடித்து யோகி ஆதித்யநாத் முகத்தில் டன் கணக்கில் கரி பூசின.

public toilet

பொது சுகாதாரத்தைப் பேணிகாக்கும் நடவடிக்கையில் அடுத்த முன்னேற்றமாக, பொது கழிப்பிடங்கள் எங்கெங்கு உள்ளன, அருகிலேயே இருக்கிறதா, இந்தியன் டைப் கழிவறையா அல்லது வெஸ்டர்ன் டைப்பா என பல்வேறு தகவல்களை தெரிந்துகொள்ளும்பொருட்டு, புதிதாக மொபைல் ஆப் ஒன்றை கேரளா வெளியிட்டுள்ளது. சுற்றுலாவுக்கு பெயர்போன கேரளாவில், மேற்படி அறிவியல்பூர்வ நடவடிக்கை உள்நாட்டு பொது மக்களுக்கு மட்டுமல்ல, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கும் பேருதவியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.