’எக்ஸிட் கணிப்புகளை நம்பி ஏமாறாதீர்கள்…20 வருடங்களாக இப்படித்தான் ஏமாத்துறாங்க’- வெங்கையா நாயுடு ஆறுதல் அணைப்பு…

 

’எக்ஸிட் கணிப்புகளை நம்பி ஏமாறாதீர்கள்…20 வருடங்களாக இப்படித்தான் ஏமாத்துறாங்க’- வெங்கையா நாயுடு ஆறுதல் அணைப்பு…

கடந்த 20 ஆண்டுகளாகவே தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் என்று வெளியிடப்பட்டவை அனைத்துமே தவறாகவே முடிந்திருக்கின்றன.

‘கடந்த 20 ஆண்டுகளாகவே தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் என்று வெளியிடப்பட்டவை அனைத்துமே தவறாகவே முடிந்திருக்கின்றன. எனவே நேற்று வெளியான கணிப்புகளை நம்பி ஏமாறவேண்டாம்’ என்று காங்கிரஸ் மற்றும் அதன் தோழமைக் கட்சிகளுக்கு மூன்று நாள் ஆறுதல் செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார் வெங்கையா நாயுடு.

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் பெரும்பான்மையானவை, மத்தியில் தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்கும் என்று அறிவித்தன. இந்த நிலையில், ஆந்திர மாநிலம், குண்டூரில் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற துணை ஜனாதிபதி வெங்கய்ய நாயுடு, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் பற்றி தனது அபிப்ராயங்களைப் பேசினார்.

naidu

”தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள், தேர்தலின் சரியான முடிவுகள் அல்ல. முதலில் நாம் அதைப் புரிந்துகொள்ள வேண்டும். கடந்த 1999-ஆம் ஆண்டில் இருந்து பெரும்பாலான வாக்கு கணிப்புகள் தவறாகவே இருந்துள்ளன. ஜனநாயகம் வலுப்பட வேண்டுமெனில், மக்களுக்கு நல்லது நடக்க வேண்டுமெனில் அனைத்து அரசியல் கட்சிகளும் தங்கள் பொறுப்புகளை உணர்ந்து கடமைகளை நிறைவேற்ற வேண்டும். 

அண்மைக் காலமாக, அரசியல் நாகரிகம் குறைந்து வருவது கவலையளிக்கிறது. அரசியல் தலைவர்களின் பேச்சுகளில் பண்பாடு சிதைந்துள்ளது. ஒருவரை தனிப்பட்ட முறையில் விமர்சிக்கிறார்கள். அரசியலில் ஒருவருக்கொருவர் எதிரி அல்ல, எதிர்ப்பாளர் மட்டுமே. இந்த அடிப்படை உண்மையைக் கூட அவர்கள் மறந்து விட்டனர். 

naidu

இதேபோல், நாடாளுமன்றத்தில் எம்.பி.க்களின் செயல்பாடுகளும், சட்டப்பேரவைகளில் எம்எல்ஏக்களின் செயல்பாடுகளும் கவலை அளிக்கிறது. அவர்கள், தாங்கள் சார்ந்துள்ள கட்சிக்கு மதிப்பளிக்கும் வகையில் நடந்துகொள்வதில்லை. நாட்டுக்கும், மாநிலத்துக்கும் திறன் மிக்க தலைவரும், நிலையான அரசும் அவசியம். யாராக இருந்தாலும் சரி, இதுதான் அவசியம்.குடியரசுத் துணைத் தலைவர்  ஆவதற்கு முன்பு, ஒரே நாளில் 16 தேர்தல் கூட்டங்களில் நான் பேசுவது வழக்கம். இப்போது மக்களிடம் இருந்து விலகி விட்டேன்.  இந்த எக்சிட் போலை நம்பாமல், எக்ஸாக்ட் போலை (நிஜ தேர்தல்) நம்புங்கள் என தெரிவித்தார்..சாதி, மதம், பணம் பார்த்து தேர்தலில் ‘சீட்’ கொடுப்பது கவலை அளிக்கிறது. அவர்கள் தேர்தலில் வெற்றிபெற கோடிக்கணக்கில் செலவளிப்பது ஜனநாயகத்தை கேலி செய்வதாக உள்ளது என்றும் வெங்கையா நாயுடு தெரிவித்தார்.