எகிறும் போலி அக்கவுண்ட்ஸ்… பதறும் ஃபேஸ்புக்..!?

எகிறும் போலி அக்கவுண்ட்ஸ்… பதறும் ஃபேஸ்புக்..!?

பேங்க் லோன்,சிம் கார்டு வாங்குறதுக்கெல்லாம் ஆதார் கார்டு அவசியம்னு சொல்றாய்ங்களோ இல்லையோ…ஃபேஸ்புக் அக்கவுண்ட் ஆரம்பிச்சு ஏதாவது பஞ்சாயத்துன்னா,இருக்கிற எல்லா அடையாள அட்டைகளையும் சப்மிட் பண்ணினாலும் திரும்ப அக்கவுண்ட்டை ஆக்டிவேட் பண்ண நாமெல்லாம் அவ்வளவு போராட வேண்டியதிருக்கு!

facebook

ஆனால்,சில பேர் போற போக்குல ஒரு நாலஞ்சு போலி அக்கவுண்ட்டை ஆரம்பித்து,அர்த்த ராத்திரியில் கடலை போடவும்,அடுத்தவன் ஸ்டேட்ஸில் போய் ஏடாகூடமா கமெண்ட் போடுறதையும் பொழப்பாவே வச்சுருக்காய்ங்க!? இந்த மாதிரி போலி அக்கவுண்ட்டை உருவாக்குகிற ஆட்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் எகிறிக்கிட்டே  போகுதுன்னு ஃபேஸ்புக் நிறுவனமே கண்ணீர் விட்டு கதறுகிற அளவுக்கு நிலைமை போயிருக்கு என்பதுதான் லேட்டஸ்ட் நிலவரம்!

facebook

கடந்த அக்டோபர் முதல் மார்ச் வரை கிட்டத்தட்ட 30 லட்சம் போலி அக்கவுண்ட்ஸ் ஆரம்பிச்ச கொஞ்ச நேரத்துக்குள்ளயே கண்டுபிடிச்சு நீக்கியிருக்கிறது ஃபேஸ்புக் நிறுவனம். இது அதற்கு முந்தைய ஆறு மாதங்களில் நீக்கப்பட்ட போலிஅக்கவுண்டுகளைவிட இரண்டு மடங்கு அதிகம். இருந்தும் தொடர்ந்து லட்சக்கணக்கான போலி அக்கவுண்ட்டை உருவாக்கப்படுவதால் அவற்றை கண்டறிய முடியாத நிலையும் இருப்பதாகவும் பேஸ்புக் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
தவிர,கடந்த 6 மாதங்களில் வெறுப்பை பரப்பும் வகையிலும், விதிமுறைகளை மீறும் வகையிலும் இருந்த 73 லட்சம் பதிவுகளை நீக்கி உள்ளதாகவும்,இது அதற்கு முந்தைய 6 மாதங்களில் நீக்கப்பட்ட பதிவுகளை விட 54 லட்சம் அதிகம் என்றும் அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்கள்.