எகிப்து வெங்காயத்தில் சல்பர் அதிகம், காரம் தூக்கலா இருக்கும் : அமைச்சர் செல்லூர் ராஜு

 

எகிப்து வெங்காயத்தில் சல்பர் அதிகம், காரம் தூக்கலா இருக்கும் : அமைச்சர் செல்லூர் ராஜு

எகிப்து வெங்காயங்கள், ஒரு வெங்காயமே சுமார் 200 முதல் 600 கிராம் வரை இருப்பதாலும், நிறம் மாறுபட்டு இருப்பதாலும் மக்கள் அதனை வாங்க விருப்பம் காட்டவில்லை.

மழை பாதிப்பின் காரணமாக வெங்காய உற்பத்தி பாதிக்கப்பட்டு இந்தியா முழுவதிலும் வெங்காய தட்டுப்பாடு நிலவியது. இதனால் வெங்காய விலை பன்மடங்கு உயர்ந்தது. வெங்காய விலை உயர்வு மக்களிடையே பெரும் பாதிப்பை ஏற்படுத்தியதால், வெளிநாடுகளில் இருந்து வெங்காயங்களை இறக்குமதி செய்யும் முயற்சியை மத்திய அரசு மேற்கொண்டது. அதன் படி, எகிப்திலிருந்து டன் கணக்கில்  வெங்காயங்கள் இறக்குமதி செய்யப்பட்டு நாடு முழுவதிலும் விற்பனைக்கு அனுப்பப்பட்டன. 

ttn

எகிப்து வெங்காயங்கள், ஒரு வெங்காயமே சுமார் 200 முதல் 600 கிராம் வரை இருப்பதாலும், நிறம் மாறுபட்டு இருப்பதாலும் மக்கள் அதனை வாங்க விருப்பம் காட்டவில்லை. அதனால், அந்த வெங்காயங்களை வாங்க ஆள் இல்லாமல் இருப்பதாகத் தகவல்கள் வெளியாயின. இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜு, எகிப்து வெங்காயத்தில் சல்பர் அதிகமாக இருப்பதால் அதன் காரம் கொஞ்சம் அதிகமாக இருக்கும். அது இதயத்துக்கு மிகவும் நல்லது. முதலமைச்சரே அதனைச் சாப்பிட்டு பரிசோதனை செய்தார் என்று தெரிவித்தார். 

ttn

மேலும், தமிழகத்தில் அடுத்த வாரம் 25,000 மெட்ரிக் டன் வெங்காயங்கள் அறுவடை செய்யப்பட்டு விற்பனைக்கு வரவுள்ளது. இதனால், வரும் காலங்களில் வெங்காய விலை குறையும் என்று தெரிவித்தார்.