எகிப்திய படத்தின் ரீமேக்கில் அஜித்?!

 

எகிப்திய படத்தின் ரீமேக்கில் அஜித்?!

ஹெப்டா தி லாஸ்ட் லெக்சர் எனும் எகிப்திய படத்தை பார்த்த அஜித், மிகவும் பிடித்துப் போய் அதனை ரீமேக் செய்ய முடிவு செய்திருக்கிறார்.

சென்னை: ஹெப்டா தி லாஸ்ட் லெக்சர் எனும் எகிப்திய படத்தை பார்த்த அஜித், மிகவும் பிடித்துப் போய் அதனை ரீமேக் செய்ய முடிவு செய்திருக்கிறார்.

எச். வினோத் இயக்கத்தில் பிங் படத்தில் நடித்து வரும் அஜித், அதன் தயாரிப்பாளரான போனி கபூரை சந்திக்க சென்றுள்ளார். அப்போது போனி கபூர் அவருக்கு ‘ஹெப்டா தி லாஸ்ட் லெக்சர்’ எனும் எகிப்திய மொழி படத்தை போட்டுக் காட்டியிருக்கிறார். அஜித்துக்கு படம் மிகவும் பிடித்துவிட்டதாம், இதன் உரிமை யாரிடம் உள்ளதென விசாரிக்க சொல்லியிருக்கிறார். அதற்கு போனி கபூர், இந்த படத்தின் உரிமை வாங்கிவிட்டதாக கூறியுள்ளார். அந்த படத்தின் ரீமேக்கில் நடிக்க அஜித் விருப்பம் தெரிவித்திருபதாக கூறப்படுகிறது.

assafsf

பிங் படம் முடிந்து சிறிய இடைவெளிக்கு பிறகு அடுத்த படத்தை ஆரம்பிக்கலாம் என எச் வினோத் கேட்டுக் கொண்டதால். அஜித் இந்த எகிப்திய படத்தை தேர்வு செய்துள்ளார், இதை சிறுத்தை சிவா இயக்குவார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.