ஊழியர்களுக்கு பஸ் வசதி, காப்பீடு கட்டாயம்! – வழிகாட்டும் உள்துறை அமைச்சகம்

 

ஊழியர்களுக்கு பஸ் வசதி, காப்பீடு கட்டாயம்! – வழிகாட்டும் உள்துறை அமைச்சகம்

ஊரடங்கு தளர்வின்போது செயல்படும் நிறுவனங்கள் ஊழியர்கள், தொழிலாளர்களுக்கு போக்குவரத்து வசதியை செய்து தர வேண்டும், மருத்துவக் காப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளை விதித்துள்ளது.

ஊரடங்கு தளர்வின்போது செயல்படும் நிறுவனங்கள் ஊழியர்கள், தொழிலாளர்களுக்கு போக்குவரத்து வசதியை செய்து தர வேண்டும், மருத்துவக் காப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளை விதித்துள்ளது.
ஊரடங்கின் போது ஏப்ரல் 20ம் தேதிக்குப் பிறகு நிறுவனங்கள் செயல்பட மத்திய அரசு அனுமதித்துள்ளது. ஆனால், இதற்கு மிகக் கடும் கட்டுப்பாடுகளை அது விதித்துள்ளது. நிறுவனங்கள், தொழிற்சாலைகளுக்கு விதித்தத்துள்ள கட்டுப்பாடுகள் விவரம் வருமாறு:
தொழிற்சாலைகள், நிறுவனங்கள் நோய்க் கிருமித் தொற்றைத் தவிர்க்க நுழைவாயில், கேன்டீன், உணவு அருந்தும் இடம், மீட்டிங் நடக்கும் அறை, திறந்த வெளிகள், வராண்டா, லிஃப்ட், தொழிற்சாலை கருவிகள், ஓய்வறை, அலுவலக சுவர் முழுவதும் கிருமி நாசினி தெளித்து தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.

anti biotic

வேலைக்கு வருபவர்கள் பொது போக்குவரத்தை எதிர்பார்க்காமல் நிறுவனங்களே தாங்களாக போக்குவரத்து வசதியை ஏற்பாடு செய்து தர வேண்டும். அந்த வாகனங்களும் 30 முதல் 40 சதவிகித பயணிகளுடனே இயக்கப்பட வேண்டும்.
அனைத்து வாகனங்கள் மற்றும் மெஷினரி நுழைவுகளும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டுப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.
எல்லா  நுழைவாயில் மற்றும் வெளியேறும் இடங்களிலும் தெர்மல் ஸ்கேனிங் செய்யப்பட வேண்டும். ஒவ்வொரு ஊழியரும், தொழிலாளரும் சோதனை செய்யப்பட்டதை உறுதி செய்ய வேண்டும்.

thermal-scanning

வேலைக்கு வருபவர்களுக்கான மருத்துவக் காப்பீடு கட்டாயம்.
லிஃப்டில் 2 முதல் நான்கு பேருக்கு மேல் பயணம் மேற்கொள்ளக் கூடாது. ஊழியர்கள் படியில் நடப்பதை ஊக்குவிக்கலாம். அத்தியாவசிய தேவையின்றி மற்ற எந்த ஒரு பார்வையாளரும் அலுவலகம் வர அனுமதிக்கக் கூடாது.
அருகில் உள்ள கோவிட் 19 வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனையில் தகவலை தயாராக வைத்திருக்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.