ஊழியர்களுக்கு காலை உணவு வழங்கப்படாததால் வாக்கு எண்ணிக்கை தாமதம் !

 

ஊழியர்களுக்கு காலை உணவு வழங்கப்படாததால் வாக்கு எண்ணிக்கை தாமதம் !

வாக்கு எண்ணும் ஊழியர்களுக்குக் காலை உணவு வழங்கப்படவில்லை எனப் புகார் எழுந்துள்ளது.

புதியதாகப் பிரிக்கப்பட்ட மாவட்டங்கள் தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் ஊரக உள்ளாட்சித் தேர்தல் 2 கட்டங்களாக நடத்தப்பட்டது. இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தொடங்கியது. பல இடங்களில் வாக்கு எண்ணும் ஊழியர்களுக்குக் காலை உணவு வழங்கப்படவில்லை எனப் புகார் எழுந்துள்ளது. அதனால், அந்த இடங்களில் எண்ணிக்கை தாமதமாக நடந்துள்ளது. 

ttn

விருதுநகர் மாவட்டம் சாத்தூர், வேதாரண்யம் ஒன்றியம்,ஆரணி, மதுரை மேற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட சில இடங்களில் காலை உணவு வழங்கப்படாததாலும், விருதுநகர் அருப்புக்கோட்டையில் வாக்குப் பெட்டிகளின் சாவி தொலைந்ததாலும் வாக்கு எண்ணிக்கை தாமதம் ஆனது. பின்னர், சாவி தொலைந்து போன வாக்கு பெட்டிகளின் பூட்டை சுத்தியலைக் கொண்டு உடைக்கப்பட்டு வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதனையடுத்து, புதுக்கோட்டையில் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்ட அதிகாரிகளுக்கு முறையாகப் பணி ஒதுக்கீடு செய்யப்படாததால் அங்கும் வாக்கு எண்ணிக்கை தாமதம் ஆகியுள்ளது.