ஊழலில் திளைத்த ஜெயலலிதாவின் மறுமுகம்! 

 

ஊழலில் திளைத்த ஜெயலலிதாவின் மறுமுகம்! 

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைந்து 3 வருடங்களாகின்றன. என்னதான் ஜெயலலிதா போல நாட்டை ஆளமுடியுமா? கலை, படிப்பு, அரசியல் என பல்வேறு திறமைகளை தனக்குள் கொண்டிருந்தாலும் ஜெயலலிதாவிற்கு பின்புறம் ஒரு ஊழல்முகமுண்டு. இதுவரை ஜெயலலிதா எத்தனை வழக்குகளில் சிக்கினார் என்பதை பார்க்கலாம்…

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைந்து 3 வருடங்களாகின்றன. என்னதான் ஜெயலலிதா போல நாட்டை ஆளமுடியுமா? கலை, படிப்பு, அரசியல் என பல்வேறு திறமைகளை தனக்குள் கொண்டிருந்தாலும் ஜெயலலிதாவிற்கு பின்புறம் ஒரு ஊழல்முகமுண்டு. இதுவரை ஜெயலலிதா எத்தனை வழக்குகளில் சிக்கினார் என்பதை பார்க்கலாம்…

ஜெயலலிதா

ஜெயலலிதாவும், அவரது தோழி சசிகலாவும் 1991 ஆண்டுக்கு முன்புவரை 12 வங்கிக் கணக்குகளை மட்டுமே வைத்திருந்தனர். ஆனால் அதற்கு பிறகு 52 வங்கிக் கணக்குகளைத் தொடங்கினார். அதில் பணம் புரள ஆரம்பித்தது. ஜெயலலிதா பதவிக்கு வருவதற்கு முன்பு அவரிடம் இருந்த தங்க நகைகள் வெறும் 7,040 கிராம்தான், ஆனால் சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா சிக்கியபோது அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட நகைகளின் எடை 27,588 கிராம். இதுமட்டுமின்றி வைர நகைகள், வீட்டு மனைகள், நிலங்கள், கட்டிடங்கள், கொடநாடு எஸ்டேட், பையனூர், சிறுதாவூர் பங்களாக்கள் என சட்டவிரோதமாக குவித்த சொத்துக்கள் ஏராளம். 

முதன்முதலில் ஜெயலலிதா சிக்கியது கலர் டிவி ஊழலில்தான். அதாவது 1995 ஆம் ஆண்டு கிராம ஊராட்சிகளில் பயன்படுத்த 45,302 வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் வாங்கியதில் 10.16 கோடி ரூபாய் அளவிற்கு லஞ்சம் பெற்றதாகக் தொடரப்பட்ட  வழக்கில் ஜெயலலிதா, சசிகலா நடராசன் உள்ளிட்டோர் சிக்கினர். இந்த வழக்கிற்காக கைது செய்யப்பட்ட ஜெயலலிதா 30 நாள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டு பின் வெளிவந்தார். 

ஜெயலலிதா

இதையடுத்து ஜெயலலிதாவிற்கு பணத்தின் மீதிருந்த ஆசை நிலத்தின்மீது திரும்பியது. சென்னை கிண்டி தொழிற்பேட்டையில் உள்ள அரசு நிறுவனமான தமிழ்நாடு சிறு தொழில்கள் கழகத்துக்குச் (டான்ஸி) சொந்தமான 3 ஏக்கர் நிலத்தை முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும், அவரது தோழி சசிகலாவும் 1992-ம் ஆண்டில் ஜெயா பப்ளிகேஷனுக்காக குறைந்த விலைக்கு வாங்கியதாகவும், அதனால் அரசுக்கு ரூ.2.76 கோடி இழப்பு ஏற்பட்டதாகவும் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கை கடந்த 2000 ஆம் ஆண்டு விசாரித்த சிறப்பு நீதிமன்றம் ஜெயலலிதா, சசிகலாவுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது. அதன்பின் மேல்முறையீடு செய்து 2003 ஆம் ஆண்டு இருவரும் இந்த வழக்கிலிருந்து வெளியே வந்தனர். 

இரண்டுமுறை சிறைக்கு சென்றுவிட்டோம்… இனியாவது ஒழுங்காக இருப்போம் என நினைத்தாரா? இல்லை..   1991-96 வரையிலான ஆட்சிக்காலத்தில் கொடைக்கானலில் கட்டிட விதிகளை மீறி, ஐந்து மாடிகள் உடைய நட்சத்திர விடுதி கட்டிக்கொள்ள பணம் பெற்றுக்கொண்டு அனுமதி அளித்ததாக ஜெயலலிதா உள்ளிட்ட அதிகாரிகளின் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதனை விசாரித்த நீதிமன்றம், ஜெயலலிதாவிற்கு ஓராண்டு சிறை தண்டனையும், 1000 ரூபாய் அபராதமும் விதித்தது. 

ஜெயலலிதா

இதையடுத்து ஜெயலலிதாவினுடைய ஊழல் டைரியில் இடம்பெறுவது நிலக்கரி இறக்குமதி வழக்கு. 1993 ஆம் ஆண்டு தமிழக அனல் மின்நிலையங்களில் பயன்படுத்த ஆஸ்திரேலியா மற்றும் இந்தோனேசியாவிலிருந்து நிலக்கரி இறக்குமதி செய்ததில் முறைகேடுகள் நடந்ததாகவும் அதனால் அரசுக்கு 6.5 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகவும் ஜெயலலிதா உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மீது வழக்குத்தொடுக்கப்பட்டது. அதன்பின் சாட்சியங்களும், ஆதாரங்களும் முறையாக இல்லாததால் சில நாட்களிலேயே இந்த வழக்கு கைவிடப்பட்டது. 

அடுத்தது ஜெ.ஜெயலலிதா டிட்கோ-ஸ்பிக் பங்குகள் வழக்கில் சிக்கினார். ரூ. 28.29 கோடி மதிப்புள்ள அரசின் டிட்கோ நிறுவன பங்குகளை ஸ்பிக் என்ற தனியார் நிறுவனத்துக்கு விற்றதில் பெரும் ஊழல்நடந்ததாக ஜெயலலிதா உள்ளிட்டோர் மீது குற்றம் சாட்டப்பட்டது. ஆனால் சிபிஐ – ஆல் குற்றச்சாட்டை நிரூபிக்க முடியவில்லை எனக்கூறி கடந்த 2004-ஆம் ஆண்டு இந்த வழக்கை தள்ளுபடி செய்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. 

1992 ஆம் ஆண்டு ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது அவரது பிறந்தநாள் விமர்சையாக கொண்டாடப்பட்டது. அப்போது தொண்டர்கள் சார்பில் 89 டி.டி.க்கள் ரூ.2 கோடி பிறந்த நாள் பரிசாக வழங்கப்பட்டது. இந்த தொகையை அவர் அரசு கருவூலத்தில் சேர்க்காமல் சொந்த கணக்கில் சேர்த்ததாக ஜெயலலிதா மற்றும் ஒரு சில அமைச்சர்கள் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. ஆனால் ஜெயலலிதா அவரது வருமான வரி தாக்கலின் போது பிறந்தநாள் பரிசுகள் குறித்துக் கொடுத்திருந்த தகவலை மறைக்காததால் அந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 

ஜெயலலிதா

இறுதியாக ஜெயலலிதா சிக்கியது சொத்துகுவிப்பு வழக்கு…  1991 முதல் 1996 ஆம் ஆண்டு வரை ஜெயலலிதா பதவி வகித்தபோது, வருமானத்துக்கு அதிகமாக ரூ.66.56 கோடி அளவுக்கு சொத்துகள் சேர்த்ததாக 1996 ஆம் ஆண்டு ஜூன் 14 ஆம் தேதி சென்னை நீதிமன்றத்தில் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் மீது திமுக வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் ஜெயலலிதாவுக்கு 100 கோடி ரூபாய் அபராதமும் 4 ஆண்டுகால சிறை தண்டனையும் விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால் தீர்ப்பின்போது ஜெயலலிதா மறைந்துவிட்டதால் ஜெயலலிதாவின் 4 ஆண்டுகால சிறைவாசம் கானல் நீராய் மறைந்தது.