ஊரு விட்டு ஊரு வந்து… சென்னையில் ’சின்ன வீடு’ பிடித்து குஜாலியாகும் எம்.எல்.ஏக்கள்..!

 

ஊரு விட்டு ஊரு வந்து… சென்னையில் ’சின்ன வீடு’ பிடித்து குஜாலியாகும் எம்.எல்.ஏக்கள்..!

எம்.எல்.ஏக்கள் பலரும் தொகுதிகளை விட்டு வெளியேறி சென்னையில் சின்ன வீடு பார்த்து குடியேறி கும்மாளமிடுவதால் அவர்களது தொகுதி மக்கள் வேதனையில் புலம்பித் தீர்க்கின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதி அ.தி.மு.க., – எம்.எல்.ஏ., விஜயகுமார். இவர், தி.நகர், எம்.எல்.ஏ., சத்யாவுடன் சேர்ந்து, பல தொழில்கள் செய்து வருகிறார். இதனால்  சென்னை, நுங்கம்பாக்கம் ஏரியாவில் வீடு பார்த்து தங்கி விட்டார்.  திருவள்ளூர் தொகுதி தி.மு.க.,  எம்.எல்.ஏ., ராஜேந்திரன், குடும்பத்துடன் சென்னை, கோட்டூர்புரத்தில்  சொந்த வீட்டில் தான் பெரும்பாலும் தங்குகிறார்.  

மாதவரம், தி.மு.க., – எம்.எல்.ஏ., சுதர்சனத்துக்கு அங்கயே வீடு இருக்கிறது. ஆனால் இவர் எந்த நேரமும், அண்ணாசாலையில் இருக்கிற ஒரு கிளப்பில் தான் எப்போதும் இருக்கிறார். இதனால் இவர்கள் சார்ந்த தொகுதி மக்கள் அனைவரும் எம்.எல்.ஏ.,க்களை சந்திக்க முடியாமலும், தங்களது குறைகளை சொல்ல முடியாமலும் புலம்பித் தவிக்கிறார்கள்.

குறிப்பு: மேலே உள்ள புகைப்படத்திற்கும் இந்த செய்திக்கும் சம்பந்தமில்லை… இந்த புகைப்படம் பாக்கியராஜ் நடித்த சின்னவீடு படத்தில் இடம்பெற்றது.