ஊருக்கே சோறுபோட்ட தமிழக டெல்டா; ஹர்பஜன் சிங் தமிழில் உருக்கம்

 

ஊருக்கே சோறுபோட்ட தமிழக டெல்டா; ஹர்பஜன் சிங் தமிழில் உருக்கம்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்துக்கு நான் துணை நிற்பேன் என கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழில் பதிவிட்டுள்ளார்

சென்னை: கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்துக்கு நான் துணை நிற்பேன் என கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழில் பதிவிட்டுள்ளார்.

கஜா புயலால் தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய மூன்று மாவட்டங்களும் புதுக்கோட்டை மாவட்டத்தின் சில பகுதிகளும் கடுமையான சேதத்தை சந்தித்துள்ளன. புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன

புயல் கரையை கடந்த போது சூறைக்காற்று வீசியதால் நாகை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் தென்னை மரங்கள், வாழை மரங்கள், பயிர்கள் உள்ளிட்டவைகள் முற்றிலும் அழிந்துவிட்டது. ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்துள்ளதால் மின் விநியோகம் பாதிப்படைந்துள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வீடுகளை இழந்த மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பப்ட்டுள்ளனர். டெல்டா மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ஏராளமானோர் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், கஜா புயல் பாதிப்பு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழில் பதிவிட்டுள்ள கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், “ஊருக்கே சோறுபோட்ட தமிழக #டெல்டா முழுதும் இன்று சோறு தண்ணிக்காக ஏங்குது.#கஜா புயலால் அத்துனை துயரங்களை அனுபவித்து அடிப்படை தேவையை தேடும் நம் அன்பு நெஞ்சங்களுக்காக கரம் கோர்ப்போம்.முடிந்ததை செய்வோம் உங்களோடு நான் துணை நிற்பேன் தமிழகமே” என்று குறிப்பிட்டுள்ளார்.