ஊருக்குள் புகுந்த 5 காட்டு யானைகள் : அச்சத்தில் மக்கள் !

 

ஊருக்குள் புகுந்த 5 காட்டு யானைகள் : அச்சத்தில் மக்கள் !

மேற்குத் தொடர்ச்சி மலையின் காட்டுப் பகுதியிலிருந்து அரசி ராஜா என்னும் யானை ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வந்தது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அர்த்தநாரி பாளையத்தில், மேற்குத் தொடர்ச்சி மலையின் காட்டுப் பகுதியிலிருந்து அரசி ராஜா என்னும் யானை ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வந்தது. அந்த யானை 2 நபர்களைக் கொன்றதால் அச்சமடைந்த கிராம மக்கள் வனத் துறையினருக்குத் தகவல் அளித்தனர். அதன் படி, அந்த யானையை மயக்க ஊசி போட்டு வனத்துறையினர் பிடித்தனர்.

Arisi raja

 

இதனைத் தொடர்ந்து அதே மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள காட்டிலிருந்து 5 யானைகள் கோவை மாவட்டம் நாய்க்கன்பாளையம் பகுதியில் புகுந்துள்ளன. காட்டில் போதிய உணவு கிடைக்காததால் இந்த யானைகள் ஊருக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்வதாகக் கூறப்படுகிறது. இதனால், அச்சமடைந்த அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்குத் தகவல் அளித்துள்ளனர்.

yanai

அங்கு விரைந்து சென்ற வனத் துறையினர், பட்டாசுகளை வெடித்து யானைகளைக் காட்டுக்குள் விரட்ட முயற்சி செய்துள்ளனர். அந்த பட்டாசு சத்தத்தால் மிரண்டு போன யானைகள், ஓடும் பொது அருகே இருந்த  டிரான்ஸ்பார்மர் மீது மோதியுள்ளன. அதனால், மின்சாரக் கம்பிகள் மோதி தீப்பொறி ஏற்பட்டுள்ளது. யானைகளை விரட்ட வனத்துறையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.