ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்ட வேட்பாளர் மாரடைப்பால் மரணம்!

 

ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்ட வேட்பாளர் மாரடைப்பால் மரணம்!

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர், ஒன்றியக்குழு உறுப்பினர் மாவட்ட குழு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கான  91,975 இடங்களுக்குத் தேர்தல் நடைபெற்றது.

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர், ஒன்றியக்குழு உறுப்பினர் மாவட்ட குழு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கான  91,975 இடங்களுக்குத் தேர்தல் நடைபெற்றது. முதல் கட்ட தேர்தலில்  76.19 %  வாக்குகளும், இரண்டாம் கட்ட தேர்தலில் 77.73% வாக்குகளும் பதிவாகியது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்குத் தொடங்கியது. ஒரு சில இடங்களில் தேர்தல் முடிவுகள் வெளியாகின. ஆனால், பல இடங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. நாளைவரை வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி தெரிவித்துள்ளார். 

பேச்சியம்மாள்

திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மேல திருச்செந்தூர் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிட்ட நடு நாலு மூலை கிணறு பகுதியை சேர்ந்த பேச்சியம்மாள் மாரடைப்பால் மரணமடைந்தார். 74 வயதான பேச்சியம்மாள், ஓய்வு பெற்ற தபால் துறை அதிகாரியாவர். இவருக்கு 4 மகன்களும், 4 மகள்களும் உள்ளனர். பிள்ளைகள் அனைவருக்கும் திருமணம் முடிந்த நிலையில், பேச்சியம்மாள் தனது கணவர் ஜெயப்பாண்டியனுடன் வசித்து வந்துள்ளார். இவர் தேர்தலில் வெற்றிப்பெற்றால் தேர்தல் ரத்து செய்யப்பட்டு மறு தேர்தல் நடத்தப்படும் என்பது குறிப்பிடதக்கது.