ஊராட்சி செயலர் சாராயம் குடிக்கும் வீடியோ ! டிவிட்டரில் பதிவேற்றிய இளைஞர் கொலை !!

ஊராட்சி செயலர் சாராயம் குடிக்கும் வீடியோ ! டிவிட்டரில் பதிவேற்றிய இளைஞர் கொலை !!

நாடெங்கும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், ஒரு கிராமத்தில்  ஊராட்சி செயலாளரும் அவரது நண்பர்களும் சாராயம் குடித்ததை வீடியோ எடுத்து ட்விட்டரில் பதிவேற்றிய இளைஞர் கொல்லப்பட்டுள்ளார். 

நாடெங்கும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், ஒரு கிராமத்தில்  ஊராட்சி செயலாளரும் அவரது நண்பர்களும் சாராயம் குடித்ததை வீடியோ எடுத்து ட்விட்டரில் பதிவேற்றிய இளைஞர் கொல்லப்பட்டுள்ளார். 

கொரோனா அச்சம் காரணமாக நாடெங்கும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் மதுபானக் கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. இதனால் மதுபிரியர்கள் கள்ளச் சாராயம் காய்ச்சும் இடங்களை தேடி கண்டுபிடித்து அதை வாங்கி குடிக்கின்றனர். சில சமயம் அது விஷமாக மாறுவதால் மதுபிரியர்கள் அநியாயமாக உயிரிழக்க நேரிடுகிறது. 
உத்தர பிரதேச மாநிலம் மீரட் அருகே உள்ள சப்னாவத் கிராமத்தில் ஊராட்சிச் செயலரும் அவரது நண்பர்களும் கடந்த மாதம் சாராயம் குடித்துக் கொண்டிருந்தனர். இதை பார்த்த ஒரு இளைஞர் அவர்கள் சாராயம் குடிப்பதை வீடியோ எடுத்துள்ளார். அதை தனது டிவிட்டரில் பதிவேற்றம் செய்ததோடு, சமூகவலைதளங்களில் வைரலாக்கி உள்ளார். 

ஆபாச படங்களை வாட்ஸ்அப் குழுவில் பகிர்ந்த முன்னாள் ஐஏஎஸ் ! பெண் ஊழியர்கள் கண்டித்ததால் மன்னிப்பு கேட்டார் !!

இதனால் ஆத்திரம் அடைந்த சப்னாவத் பஞ்சாயத்து செயலாளர் சாராயம் குடிக்கும்போது யார் வீடியோ எடுத்தது என்பதை கண்டுபிடித்தார். அது மோஹித் ராணா என்ற இளைஞன் என தெரியவர அவரை தீர்த்துக் கட்ட முடிவு செய்தார். 
ராணா ஒரு வயலில் இருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது, ஊராட்சிச் செயலாளரின் ஆட்கள் அவரை சுட்டுக் கொன்றதாகக் கூறப்படுகிறது. இந்த விஷயம் அரசாங்கத்தின் கவனத்திற்கு தெரியவர ஊராட்சி செயலாளர் சுஷில் குமார் இடைநீக்கம் செய்யப்பட்டார்.